News March 23, 2025
CLUB THROW-வில் தங்கம் வென்று அசத்தல்

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் 2-வது கேலோ தேசிய பாரா விளையாட்டு போட்டியில் சேலம் மாவட்டம், கருப்பூரைச் சேர்ந்த அலெக்சாண்டர், ஆடவர் பிரிவில் F51 CLUB Throw-வில் சிறப்பாக விளையாடி தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.
Similar News
News March 25, 2025
சேலம் மாநக இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் மாநகரில் இரவு நேரங்களில் பணிபுரியும் காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டாலோ? அல்லது ரவுடிகள் தொல்லை இருந்தாலும் கீழ்கண்ட எண்ணில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாநகர காவல் துறை சார்ந்த அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.
News March 25, 2025
சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

சேலம் மகாத்மா காந்தி விளையாட்டரங்கத்தில் உள்ள நீச்சல் குளத்தில் வரும் ஏப்ரல் 01 முதல் நீச்சல் கற்றல் பயிற்சி முகாம் துவங்கவுள்ளது. 12 வேலை நாட்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி கட்டணமாக மொத்தம் ரூ.1770 ஆகும். கோடைக்கால நீச்சல் கற்றல் பயிற்சி கட்டணத்தொகை www.sdat.tn.gov.in வாயிலாகவும், G Pay, Phone Pay மூலமாக மட்டும் செலுத்த வேண்டும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News March 25, 2025
சேலம் மாவட்டத்தில் 3 அறிவுசார் மையங்கள் அமைகிறது!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 25) நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கை அறிவிப்புகளை அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டுள்ளார். அதன்படி, போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் பயிற்சி பெற ஏதுவாக நடப்பாண்டில் வாழப்பாடி, கருப்பூர், ஜலகண்டாபுரம் உள்பட தமிழகத்தில் 20 பேரூராட்சிகளில் ரூ.33 கோடியில் அறிவுசார் மையங்கள் அமைகிறது.