News May 23, 2024
குற்றவாளியை நெருங்கிய CBCID?

புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில், பட்டியலின மக்கள் உபயோகிக்கும் நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தமிழகத்தை அதிர்ச்சி அடையச் செய்தது. இந்த வழக்கை CBCID விசாரித்து வரும் சூழலில், குற்றவாளியை அவர்கள் நெருங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பல்வேறு நபர்களிடம் பல கட்ட விசாரணை நடந்த நிலையில், காவலர் ஒருவரிடம் இன்று 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News August 18, 2025
LIC-ல் ₹88,000 சம்பளத்தில் வேலை.. 840 பணியிடங்கள்

LIC நிறுவனத்தில் காலியாகவுள்ள உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் உள்ளிட்ட 841 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: பட்டப்படிப்பு. வயது வரம்பு: 21 – 32. சம்பளம்: ₹88,635 – ₹1,69,025. தேர்வு முறை: முதல்நிலைத் தேர்வு (அக்.3), முதன்மைத் தேர்வு (நவ.8), நேர்காணல். விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்.8. மேலும் அறிய & விண்ணப்பிக்க இங்கே <
News August 18, 2025
இனி 10 நிமிடத்தில் ஆன்லைனில் நிலம் வாங்கலாம்

மளிகை பொருட்களை போல இனி நிலத்தையும் 10 நிமிடங்களில் வாங்கலாம். ZEPTO நிறுவனம், ரியல் எஸ்டேட்டிலும் கால் பதித்துள்ளது. அதாவது, தனியார் லேண்ட் டெவலப்பர் நிறுவனத்தோடு இணைந்து இந்த வசதியை தொடங்கவுள்ளது Zepto. ஏற்கெனவே 10 நிமிட மளிகை டெலிவரிக்கு எதிர்ப்புகள் இருக்கும் நிலையில் இந்த புதிய முன்னெடுப்பு என்ன மாதிரியான வரவேற்பை பெறும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கணும். உங்கள் கருத்து?
News August 18, 2025
விசிக – சிபிஎம் இடையே கருத்து மோதல்: கூட்டணியில் சலசலப்பு

தூய்மை பணியாளர்களின் பணி நிரந்தர விவகாரத்தில் திமுக கூட்டணிக்குள் மோதல் நிலவுகிறது. குப்பை அள்ளுபவர்களை பணி நிரந்தரம் செய்து அவர்களை குப்பை மட்டுமே அள்ள சொல்வதில் உடன்பாடு இல்லை என திருமாவளவன் தெரிவித்திருந்தார். இதனை எதிர்த்த சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம், பணி நிரந்தரம் என்பது சட்டப்பூர்வமான கோரிக்கை என வலியுறுத்தியுள்ளார். இதனால், கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. யாருடைய கருத்து சரி?