News January 23, 2025
எவரெஸ்ட் ஏறுவது இவ்வளவு காஸ்ட்லியா!

எவரெஸ்ட்டில் ஏறுவதற்கான கட்டணத்தை, நேபாள அரசு 36% அதிகரித்துள்ளது. பாப்புலர் சீசனான ஏப்-மே மாதங்களில், சிகரத்தில் ஏற ரூ.9.5 லட்சமாக இருந்த கட்டணம், ரூ.12.9 லட்சமாக (35%) உயர்த்தப்பட்டுள்ளது. செப்-நவ சீசனில் ரூ.6.4 லட்சம், டிச-பிப் சீசனில் ரூ.3.2 லட்சம் எனக் கட்டணம் உயர்ந்துள்ளது. ஆண்டுக்கு 300 பேர் எவரெஸ்ட் சிகரம் ஏறுகின்றனர். சாகசம் செய்யக் கூட நிறைய செலவு பண்ணனும் போல இருக்கே!
Similar News
News December 2, 2025
கிங் கோலியின் சாதனை.. வீறுநடை போடும் இந்தியா

ODI கிரிக்கெட்டில் சேஸ் மாஸ்டரான விராட் கோலி கடைசியாக அடித்த 17 சதங்களில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வியை தழுவவில்லை. 17 போட்டிகளில் இந்தியா 15-ல் வெற்றி, இரு போட்டிகள் சமனிலும் முடிந்துள்ளன. மேலும், சதமடித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்வதிலும் நம்பர் 1 வீரராக கோலி உள்ளார். அவர் 82 சதங்கள் விளாசியுள்ள நிலையில், அதில் இந்தியா 59 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளது.
News December 2, 2025
ரசிகர்களை என்னை கொண்டாட வேண்டாம்: SK

சென்னையில் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசும்போது, தனது ரசிகர்களிடம் தான் என்ன எதிர்பார்க்கிறேன் என்பதை சிவகார்த்திகேயன் பகிர்ந்துகொண்டார். ரசிகர்கள் தன்னை கொண்டாட வேண்டாம் என அறிவுறுத்திய அவர், பெற்றோர்களை கொண்டாடினால் போதும் எனவும் கூறியுள்ளார். ரசிகர்கள் தன்னிடம் குடும்பமாக பழகவேண்டும் என்பதே ஆசை என்றும், அதனால்தான் அனைவரையும் சகோதர, சகோதரிகள் என அழைத்து வருவதாகவும் பேசியுள்ளார்.
News December 2, 2025
இன்றைய நல்ல நேரம்

▶டிசம்பர் 2, கார்த்திகை 16 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10.45 AM – 11:45 AM & 7.30 PM – 8.30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: த்ரயோதசி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்


