News July 7, 2024
CLAT 2025 தேர்வு தேதி அறிவிப்பு

தேசிய சட்ட பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான, CLAT 2025 நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு வருகிற 15ஆம் தேதி தொடங்குகிறது. விருப்பமுள்ளவர்கள் ₹4000 (SC/ST -₹3500) விண்ணப்ப கட்டணமாக செலுத்தி, consortiumofnlus.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இளநிலை படிப்பிற்கு 45%, முதுகலை படிப்பிற்கு 50% மதிப்பெண்கள் பிளஸ்2-வில் எடுத்திருக்க வேண்டும். வரும் டிசம்பர் 1ஆம் தேதி தேர்வு நடைபெறும்.
Similar News
News September 23, 2025
ஒரு நாளுக்கு ATM-ல் எவ்வளவு PF தொகை எடுக்கலாம்?

EPFO 3.0 விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது. இதனால் இனி, EPFO போர்ட்டலில் அப்ளை செய்து காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ATM, UPI மூலம் PF பணத்தை எளிதாக எடுக்கலாம். இதற்கான வரம்பு, ATM-ல் எடுப்பதற்கு ₹10,000 – ₹25,000 வரையிலும், UPI மூலம் ₹2,000 – ₹3,000 வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், ஒருமுறை எடுத்த பிறகு, மீண்டும் எடுக்க 30 நாள்கள் இடைவெளி அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
News September 23, 2025
Sports Roundup: பலோன் டி’ஓர் விருது வென்ற டெம்பலே

*இந்தியாவுக்கு எதிரான 2-வது அன் அபிசியல் டெஸ்டில் ஆஸி., முதல் நாள் முடிவில் 350 ரன்கள் எடுத்துள்ளது. *2025-ம் ஆண்டுக்கான பலோன் டி’ஓர் விருதை பிரான்ஸ் வீரர் டெம்பலே வென்றுள்ளார். * ஹாங்காங் சிக்சஸ் தொடருக்கு இந்தியாவின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமனம். *WI-க்கு எதிரான டெஸ்ட் தொடரில் கே.எல்.ராகுலை துணை கேப்டனாக நியமிக்க வாய்ப்பு. *சர்ரே கவுண்டி அணிக்காக இந்தியாவின் ராகுல் சாஹர் விளையாடவுள்ளார்.
News September 23, 2025
உங்கள் கல்லீரலை காக்க… இதையெல்லாம் கவனியுங்க

உடலில் 500-க்கு மேற்பட்ட வேலைகளை செய்யும் கல்லீரல் தான், உடலில் உள்ள நச்சுகளையும் வெளியேற்றுகிறது. அப்படிப்பட்ட கல்லீரலை பராமரிக்க இவற்றை பின்பற்றவும்: *குளிர்பானம், சோடா, சர்க்கரைக்கு நோ *உடல்பருமனை கட்டுப்பாட்டில் வையுங்க *பெயின் கில்லர்ஸ் மருந்துகள் கூடவே கூடாது *ஃபாஸ்ட்புட்-ஐ தவிர்க்கவும் *மது, புகை வேண்டவே வேண்டாம் *கல்லீரல் அழற்சியை தவிர்க்கவும் *11 pm to 4 am கட்டாயமாக தூங்கவும். SHARE IT