News October 3, 2024
5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து

புதிதாக 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மராத்தி, பெங்காலி, பாலி, பிராகிருதம், அசாமி மொழிகளுக்கும் செம்மொழி அந்தஸ்து வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மராத்திக்கு செம்மொழி அந்தஸ்து அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், கன்னடம், மலையாளம், ஒடியா செம்மொழியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News August 10, 2025
ஆக.15 முதல் ₹3,000 பாஸ் அமல்.. ரெடியா இருங்க!

ஆண்டுக்கு ₹3,000 செலுத்தி நாடு முழுதும் பயணிக்கும் புதிய, ‘FASTAG’ நடைமுறை வரும் 15-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த பாஸ், ஆக்டிவேட் செய்யப்பட்ட நாளில் இருந்து ஓராண்டு (அ) 200 முறை பயணிக்கலாம். வணிக நோக்கமற்ற தனியார் வாகனங்களுக்கான இத்திட்டத்தில் கார்கள், ஜீப்கள், வேன்கள் போன்ற வாகனங்கள் இந்த பாஸை பயன்படுத்தலாம். வாகன ஓட்டிகள் இந்த வருடாந்திர பாஸை ‘ராஜ்மார்க் யாத்ரா’வில் பெறலாம். SHARE IT.
News August 10, 2025
வெற்றி கூட்டணி அமைப்பேன்: ராமதாஸ் உறுதி

10.5% உள் ஒதுக்கீடு விவகாரத்தில் தாங்கள் போராட்டம் நடத்தினால், தமிழ்நாடு தாங்காது என ராமதாஸ் எச்சரித்துள்ளார். பாமக மகளிர் மாநாட்டில் பேசிய அவர், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதில் முதல்வருக்கு என்ன தயக்கம் என்றும் கேள்வி எழுப்பினார். 2026 தேர்தலுக்கு வெற்றி கூட்டணி அமைக்கப் போவதாக தெரிவித்த ராமதாஸ், தான் சொல்வது நடக்கும் எனவும் உறுதிபட கூறினார்.
News August 10, 2025
இனி Gpay, PhonePe கிடையாது.. கையில காசு கொடு!

இந்தியாவின் ஐடி தலைநகரமாக பார்க்கப்படும் பெங்களூருவில் தங்கி, ஏராளமான தமிழக இளைஞர்களும் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், அங்குள்ள தங்கும் விடுதிகளில் UPI மூலம் வாடகை செலுத்துவதை பெரும்பாலான உரிமையாளர்கள் நிறுத்தியுள்ளனர். UPI மூலம் பணம் செலுத்தினால் 12% ஜிஎஸ்டி செலுத்த வேண்டுமாம். அரசுக்கு வரி செலுத்துவதை தவிர்க்கவே இப்படி செய்வதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. இதுபற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?