News March 16, 2024
அடுத்த ஆண்டு சென்னையில் செம்மொழி மாநாடு

சென்னையில் 2025 ஜூன் மாதம் 2ஆம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “இயல், இசை, நாடகம் என முத்தமிழுடன் கணினித் தமிழும் இணைந்து நற்றமிழாக திகழ்கிறது. தமிழ் மொழிக்கு செம்மொழி தகுதி பெற்றுத் தந்து நூற்றாண்டு கனவை நனவாக்கியவர் கலைஞர். அவரது வழியில் சென்னையில் 5 நாள்கள் சீரோடும் சிறப்போடும் நடத்தப்படும்” எனக் கூறினார்.
Similar News
News December 6, 2025
புடின் ருசித்த இந்திய உணவுகள்

இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்த அதிபர் புடின், பல இந்திய உணவுகளை ருசித்து சாப்பிட்டுள்ளார். நேற்று ஜனாதிபதி இல்லத்தில் அவருக்கு சிறப்பு விருந்து அளித்து உபசரிக்கப்பட்டது. மோமோஸ், பனீர் ரோல், உருளைக்கிழங்கு தந்தூரி, முருங்கை சூப், பாலக் கீரை, கஷ்மீர் ஸ்டைல் வால்நட் சட்னி, பருப்பு குழம்பு, நாண் ரொட்டி, பாதாம் அல்வா, புலாவ், பிஸ்தா குல்ஃபி என இந்திய சைவ உணவுகள் வழங்கப்பட்டுள்ளன.
News December 6, 2025
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பொன்மொழிகள்!

*மற்றவர்களைவிட திறமையாக விளையாட வேண்டுமானால் முதலில் விளையாட்டின் விதிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும் *வெற்றிபெற்ற மனிதனாக ஆவதற்கு முயற்சி செய்யாதீர்கள்! மாறாக, மதிப்புமிக்க மனிதனாக மாற முயலுங்கள் *அமைதி என்பது ஆழமான புரிதலினால் ஏற்படுவது, அதை ஒருபோதும் அடக்குமுறையால் ஏற்படுத்திவிட முடியாது *மற்றவர்களுக்காக வாழும் வாழ்க்கையே, ஒரு பயனுள்ள வாழ்க்கையாகிறது
News December 6, 2025
சென்னை புத்தக கண்காட்சி ஜன.7-ல் தொடக்கம்

புத்தக வாசிப்பாளர்களின் திருவிழாவான சென்னை புத்தக கண்காட்சி ஜன.7-ல் தொடங்கும் என பபாசி அறிவித்துள்ளது. வழக்கம்போல, நந்தனம் YMCA மைதானத்தில் புத்தக கண்காட்சி நடைபெறவுள்ளது. மொத்தமாக 13 நாட்கள் என ஜன.19-ம் தேதி வரை கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் சுமார் 900 அரங்குகள் அமைக்கப்படும். மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


