News October 13, 2025

11-ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து: என்னென்ன மாற்றங்கள்?

image

11-ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது நடப்பு கல்வியாண்டு (2025-26) முதலே அமலுக்கு வருகிறது. எனவே 2017-18 கல்வியாண்டிற்கு முன்பு இருந்த, பள்ளிகள் மூலம் தேர்வுகள் நடத்தும் முறை பின்பற்றப்படும். இனி 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மட்டும் தனியாக வழங்கப்படும். 11-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள், 2030-க்குள் அரியர் தேர்வை எழுதிக் கொள்ளலாம்.

Similar News

News October 13, 2025

திமுக அரசுக்கு சவுக்கடி: எல்.முருகன்

image

கரூர் சம்பவத்தில், திமுக அரசுக்கு உச்சநீதிமன்றம் சரியான சவுக்கடி கொடுத்துள்ளதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இது குறித்த அவரது X பதிவில், கரூர் வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றியதும், ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் SIT அமைக்க உத்தரவிட்டிருப்பதும் வரவேற்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார். விரைவில் கரூர் சம்பவத்தின் உண்மை வெளிவரும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

News October 13, 2025

BREAKING: தீபாவளி விடுமுறை.. தமிழக அரசு HAPPY NEWS

image

தீபாவளியையொட்டி ஆம்னி பஸ்களில் டிக்கெட் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இந்நிலையில், மக்களுக்கு சர்ப்ரைஸாக அரசு சார்பில் ஆம்னி பஸ்களை இயக்கவுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். சேவை நோக்கில் சிறப்பு பஸ்களுடன் தனியார் பஸ்கள் இயக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 300 ஆம்னி பஸ்களை அரசு சார்பில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம், அரசு பஸ் டிக்கெட் விலையில் ஆம்னி பஸ்ஸில் போகலாம்!

News October 13, 2025

அரையிறுதிக்கு முன்னேறுமா இந்திய மகளிர் அணி?

image

மகளிர் உலகக் கோப்பை தொடரில், இலங்கை, பாக்.,ஐ வீழ்த்திய இந்தியா, தெ.ஆப்பிரிக்கா, ஆஸி., உடனான போட்டிகளில் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தது. லீக் சுற்றில் இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்கதேசம் உடன் இந்தியா மோதவுள்ளது. இவற்றில் 2 போட்டிகளில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருக்கிறது. புள்ளிகள் பட்டியலில் 3-ம் இடத்தில் உள்ள இந்தியா, அடுத்தடுத்த போட்டிகளில் ஆதிக்கம் செலுத்துமா?

error: Content is protected !!