News May 8, 2025

10-ம் வகுப்பு தேர்வு முடிவு: 15-ம் தேதிக்கு முன்பு வெளியீடு?

image

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு வருகிற 15-ம் தேதிக்கு முன்பு வெளியாக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநிலம் முழுவதும் இன்று 12-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகியுள்ளது. இதையடுத்து 10-ம் வகுப்பு தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என மாணவர்களிடையே எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில், அந்தத் தேர்வு முடிவு 15-ம் தேதி (அ) அதற்கு முன்பு வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. என்ன ரெடியா?

Similar News

News May 8, 2025

‘OPERATION SINDOOR’ டிரேட்மார்க்: போட்டிப்போடும் நிறுவனங்கள்

image

‘Operation Sindoor’ என்ற பெயருக்கு வணிக டிரேட்மார்க் லைசன்ஸ் கோரி ரிலையன்ஸ் நிறுவனம் உள்பட நான்கு பேர் விண்ணப்பித்ததாக தகவல் வெளியானது. பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ ஒரே நாளில் நாட்டு மக்களின் மனத்தில் பதிந்துவிட்ட நிலையில், இந்த பெயருக்கு போட்டிப் போடுகின்றனர். ஆனால், தவறுதலாக விண்ணப்பம் கொடுக்கப்பட்டதாக விளக்கம் அளித்துள்ள ரிலையன்ஸ், அதை வாபஸ் பெற்றுள்ளது.

News May 8, 2025

பாகிஸ்தான் பொய் சொல்கிறது: விக்ரம் மிஸ்ரி

image

இந்தியா நடத்திய தாக்குதல் குறித்து பாகிஸ்தான் பொய் சொல்வதாக நம் வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். தீவிரவாதிகள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் உயிரிழந்தவர்கள் அனைவரும் தீவிரவாதிகள் மட்டுமே, பொதுமக்கள் அல்ல என்று கூறிய மிஸ்ரி, தீவிரவாதிகளுக்கு ஆதரவு தரவில்லை எனில், அவர்களின் உடல்களுக்கு ஏன் பாக்., அரசு கொடி போர்த்தி மரியாதை தந்தது எனக் கேள்வி எழுப்பினார்.

News May 8, 2025

எங்கள் காதுகள் பாவமில்லையா? ஆர்எஸ் பாரதி

image

திமுக ஆட்சிக்கு உள்ள செல்வாக்கை கண்டு இபிஎஸ் விரக்தியின் உச்சத்துக்கே சென்றுவிட்டார் என ஆர்எஸ் பாரதி விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2026-ல் மட்டுமல்ல இனி எப்போதும் அதிமுகவால் வெற்றிபெற முடியாது. எங்களை குறை கூறுவதற்கு கேடுகெட்ட ஆட்சி நடத்தியவருக்கு அருகதை இல்லை. இப்படி கதைவிட்டால் மக்கள் நம்புவார்கள் என நினைக்கிறார். எங்கள் காதுகளும் பாவம் இல்லையா? என சாடியுள்ளார்.

error: Content is protected !!