News October 30, 2025
தேவர் நினைவிடத்தில் மோதல்.. பரபரப்பு

பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மோதல் ஏற்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த வந்த, மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார், அங்கிருந்த பூசாரிகளை வெளியேற வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்ததால், தேவர் நினைவிட பூசாரிகளை ஸ்ரீதர் வாண்டையார் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் தாக்கியுள்ளனர். இதனால், பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
Similar News
News October 30, 2025
கேரளாவில் தொடங்கிய SIR

<<18130099>>கேரளாவில் <<>>ஆளுங்கட்சி, எதிர்கட்சி உள்பட பிரதான கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடங்கியுள்ளது. அந்த வகையில், முதல் Enumeration Form அம்மாநில கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு வழங்கப்பட்டுள்ளது. SIR நடவடிக்கை வாக்காளர் பட்டியலை தூய்மைப்படுத்தும் பணி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
News October 30, 2025
ADMM-Plus மாநாடு: மலேசியா செல்கிறார் ராஜ்நாத் சிங்

மலேசியாவில் ASEAN மாநாடு நடைபெற்றது. இதை தொடர்ந்து, நவ.1-ம் தேதி ASEAN பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டமைப்பின் பிளஸ் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்க உள்ளார். இதற்காக இன்று அவர் மலேசியா புறப்படுகிறார். ADMM-Plus மாநாட்டில், பயங்கரவாத ஒழிப்பு, பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
News October 30, 2025
கொத்து கொத்தா கொட்டும் முடி ஒரே வாரத்தில் சரியாக TIPS!

வெந்தயத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் தலைமுடி வளர்ச்சிக்கு உதவுவதாக சித்தா டாக்டர்கள் சொல்றாங்க. ➤2 ஸ்பூன் வெந்தய விதைகளை தண்ணீரில் ஊற வையுங்கள் ➤அதை தண்ணீர் சேர்த்து மென்மையான பேஸ்ட்டாக அரைத்துக்கொள்ளுங்கள் ➤ அந்த பேஸ்ட்டை Scalp, தலைமுடியில் தடவி 30 நிமிடங்கள் ஊற வைக்கவும் ➤பிறகு வெதுவெதுப்பான நீர் & ஷாம்பு பயன்படுத்தி அலசுங்கள். பலருக்கு பயனளிக்கும் SHARE THIS.


