News April 26, 2024
தமிழக பாஜகவினர் இடையே வெடித்தது மோதல்

மக்களவைத் தேர்தலில் பூத் ஏஜெண்டுகளுக்கு கொடுத்த பணத்தை பகிர்வது தொடர்பாக பல இடங்களில் பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஏஜென்ட்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை மாவட்ட நிர்வாகிகளே எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால், கோபத்திற்கு ஆளான பூத் ஏஜெண்டுகள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர் ஒட்டி அதிருப்தி வெளிப்படுத்தி வருகின்றனர். ஒருசில இடங்களில் இவ்விவகாரம் அடிதடியிலும் முடிந்துள்ளது.
Similar News
News March 18, 2026
சேலம் அருகே கலவரமான காது குத்து விழா!

சேலம் திருமலைகிரி பகுதியை சேர்ந்தவர் சரவணன் கடந்த 15ஆம் தேதி இவரது சகோதரி மகன் காது குத்து நிகழ்ச்சி நடைபெற்றது. குடும்பத்துடன் பங்கேற்றார் ஸ்பீக்கரில் பாடல் ஒளிபரப்பப்பட்டது. அதே போலவே சேர்ந்த மணிகண்டன் காளியப்பன் ஆகிய ஆறு பேர் பாடல் ஒலிக்க எதிர்ப்பு தெரிவித்தனர் இரு தரப்பினரடிய வாக்குவாதம் கைதளப்பாக மாறியது இதனை எடுத்து புகாரின் பேரில் இரும்பாலை போலீசார் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை
News March 18, 2026
எந்த வயதில் தத்தெடுத்தாலும் மகப்பேறு விடுப்பு உண்டு : SC

3 மாதங்களுக்கு உட்பட்ட குழந்தையை தத்தெடுத்தால் மட்டுமே 12 வார கால மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என்று கூறும் சட்டப்பிரிவு 60(4)-ஐ SC ரத்து செய்துள்ளது. ஒரு குழந்தை எந்த வயதில் தத்தெடுக்கப்பட்டாலும், அந்தப் புதிய சூழலுடனும் தாயுடனும் ஒன்றிணைவதற்கு கால அவகாசம் தேவை எனவும், தத்தெடுக்கும் குழந்தையின் வயது எவ்வளவாக இருந்தாலும், தாய்க்கு மகப்பேறு விடுப்புக்கு உரிமை உண்டு என்றும் தீர்ப்பளித்துள்ளது.
News March 18, 2026
கடந்த ஓராண்டில் மட்டும் 1,408 கொலைகள் நடந்துள்ளது: EPS

குற்றங்களை விழிப்புடன் கண்காணிக்க வேண்டிய உளவுத்துறை ஸ்டாலின் குடும்பத்தின் ஏவல் துறையாக இருக்கிறது என EPS குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னையில் பேசிய அவர், ஆம்ஸ்ட்ராங்க் படுகொலை முதல் காங்கிரஸின் நெல்லை மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெட்டி எரித்து கொலை செய்யப்பட்டது வரை குற்றவாளிகளை இன்னும் கண்டுபிடிக்கவில்லை எனவும், TN-ல் கடந்த ஓராண்டில் மட்டும் 1,408 கொலைகள் நடந்துள்ளது என்றும் விமர்சித்துள்ளார்.


