News April 21, 2024
காங்கிரஸ், RJD இடையே மோதல்

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்தனர். I.N.D.I.A கூட்டணி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் இரு கட்சித் தொண்டர்களும் கலந்து கொண்டனர். அப்போது, கூட்டத்திற்குள் திடீரென இரண்டு கட்சியினரும் நாற்காலிகளை கொண்டு தாக்கிக் கொண்டனர். பாஜக இதனை ‘வன ராஜ்ஜியம்’ என்று விமர்சனம் செய்துள்ளது.
Similar News
News January 2, 2026
₹2.20 லட்சம் கோடி மாயம்: அன்புமணி

கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவே கடன் வாங்கியதாக DMK அரசு கூறுவது பொய் என அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். பொறுப்பேற்றது முதல் 2025 மார்ச் வரை ₹3.86 லட்சம் கோடி வாங்கியதாகவும், அதில் மூலதனச் செலவாக ₹1.66 லட்சம் கோடி மட்டுமே பயன்படுத்தியதாகவும் கூறியுள்ளார். RBI புள்ளிவிவரங்களை சுட்டிக்காட்டி, மீதமுள்ள ₹2.20 லட்சம் கோடி கடனை யாருக்கும் பயனளிக்காத வகையில் வீணாக அரசு செலவிட்டுள்ளதாக அவர் சாடியுள்ளார்.
News January 2, 2026
TN-ஐ பற்றி ரஜினி என்ன சொல்வார்? கஸ்தூரி

TN-ல் நடக்கும் சம்பவங்களை பார்த்து அச்சமாக உள்ளதாக கஸ்தூரி தெரிவித்துள்ளார். சென்னையில் உயர் ரக OG வகை கஞ்சா கிலோ கணக்கில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதைதான் அமைச்சர் ஜீரோ என சொல்லியிருப்பார் என்று அவர் கூறினார். TN-ல் மூலைக்கு மூலை போதைப்பொருள் கிடைப்பதாக கூறிய அவர், முன்பு ஒருமுறை TN-ஐ கடவுள் கூட காப்பாற்ற முடியாது என்ற ரஜினி தற்போது என்ன சொல்வார் என்று கேட்க விரும்புவதாக பேசியுள்ளார்.
News January 2, 2026
இன்றைய நல்ல நேரம்

▶ஜனவரி 2, மார்கழி 18 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 1.30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶திதி: சதுர்தசி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்


