News December 5, 2025
CLARIFICATION: தவறுதலாக இடம்பெற்ற MLA புகைப்படம்

சேலம் காமனேரியில், மூதாட்டி ஒருவரை முன்னாள் MLA அர்ஜுனன் தாக்கியதாக ஒரு செய்தி நேற்று வெளியானது. அப்போது அந்த வீடியோவுடன், தற்போது கோவை வடக்கு MLA-வான அம்மன் K.அர்ஜுனன் படம் தவறுதலாக பதிவிடப்பட்டு பின் நீக்கப்பட்டது. செய்திகளை கவனமுடன் பதிவிட்டும் இந்த தவறு நிகழ்ந்ததற்காக வருந்துகிறோம். மேற்கண்ட சம்பவத்துக்கும் MLA அம்மன் K.அர்ஜுனனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Similar News
News December 5, 2025
கோவை: 1 டிக்கெட் ரூ.1 லட்சமா? ஷாக்கான மக்கள்

பைலட்டுகள் பற்றாக்குறையால் இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் கோவையில் இருந்து வெளியூருக்கான பிற விமான கட்டணம் பலமடங்கு அதிகரித்துள்ளது. அதில் கோவை டூ சென்னைக்கு ரூ.70,000 முதல் ரூ.1 லட்சம் வரை உயர்ந்துள்ளது. மேலும், இதே போல் திருச்சிக்கு செல்லும் விமான கட்டணமும் உயர்ந்துள்ளது. இந்த விமான கட்டண உயர்வால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
News December 5, 2025
கோவை: அடுமனைப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அடுமனைப் பொருட்கள் தயாரிக்கும் 2 நாட்கள் பயிற்சி வருகிற (09.12.2025 மற்றும் 10.12.2025) தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் ரொட்டி வகைகள், கேக் மற்றும் பிஸ்கட், பப்ஸ் தயாரிக்க பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு 94885-18268 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
News December 5, 2025
கோவை: INTERVIEW இல்லாமல் மத்திய அரசு வேலை ரெடி!

India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள், <


