News October 11, 2025
தூங்கும் உலகில் தூங்காத நகரங்கள் PHOTOS

உலகின் பல நாடுகளில் இரவில் ஜொலிக்கும் தூங்கா நகரங்கள் உள்ளன. உணவகம், போக்குவரத்து, வர்த்தகம் என அனைத்தும் இரவில் இயங்கும். வேலைவாய்ப்பு, சுற்றுலா, நவீன வாழ்க்கைமுறை ஆகியவையே தூங்கா நகரங்களின் முக்கிய காரணிகளாக இருந்து வருகின்றன. மேலே, சில பிரபல நகரங்களின் பட்டியலை, போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் உங்களுக்கு பிடித்த நகரம் எது?
Similar News
News October 12, 2025
திமுகவின் நிலைய வித்துவான் TTV: அதிமுக

திமுகவின் நிலைய வித்துவானாக TTV மாறிவிட்டார் என அதிமுக கடுமையாக விமர்சித்துள்ளது. EPS மீதான தனிப்பட்ட பொறாமையில் திமுகவிடம், TTV தன்மானத்தை அடகு வைத்துவிட்டதாகவும் அதிமுக சாடியுள்ளது. மேலும் கரூர் துயரில் CBI விசாரணையை எதிர்க்கும் திமுக அரசுக்கு TTV முட்டு கொடுப்பதாகவும், அவரது செயல்கள் ஜெயலலிதாவிற்கு துரோகம் இழைக்கும் வகையில் இருப்பதாகவும் அதிமுக தெரிவித்துள்ளது.
News October 12, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (அக்.12) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News October 12, 2025
பிக்பாஸ் வீட்டில் முதல் எலிமினேஷன்

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 முதல் வாரத்திலேயே 2 போட்டியாளர்கள் வீட்டில் இருந்து வெளியேறினர். இந்த வார நாமினேஷனில் திவாகர், ஆதிரை, கலையரசன், வியானா, அப்சரா, பிரவீன் ராஜ், பிரவீன் காந்தி இடம்பெற்றிருந்த நிலையில், முதல் எலிமினேஷனாக பிரவீன் காந்தி வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். முன்னதாக, தனிப்பட்ட காரணங்களுக்காக நந்தினியும் வீட்டில் இருந்து நடையை கட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.