News August 24, 2024
CISF படைப்பிரிவில் 1,130 கான்ஸ்டபிள் வேலை

CISF படைப்பிரிவில் 1,130 கான்ஸ்டபிள் பயர்மேன் பணியிடங்களுக்கு விரைவில் ஆட்தேர்வு நடைபெறவுள்ளது. இதற்கு வருகிற 30ஆம் தேதி முதல் CISF இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அந்த வேலைக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 30ஆம் தேதி கடைசி நாளாகும். 1,130 இடங்களில் பொதுப் பிரிவினருக்கு 466, OBC 236, எஸ்சி 161, எஸ்டி 153 , EWS பிரிவினருக்கு 114 இடங்கள் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. SHARE IT
Similar News
News December 18, 2025
விடுமுறை.. நாளை முதல் 3 நாள்களுக்கு HAPPY NEWS

வார விடுமுறையையொட்டி, மக்களின் வசதிக்காக அரசு சிறப்பு பஸ்களை அறிவித்துள்ளது. அந்த வகையில், நெரிசலின்றி ஊர்களுக்குச் செல்ல, நாளை முதல் டிச.21 வரை சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து சுமார் 1,000 பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன. இதுவரை 20,000 பேர் வரை டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். www.tnstc.in இணையதளம் (அ) TNSTC செயலியில் டிக்கெட் முன்பதிவு செய்து உங்கள் பயணத்தை ஈசியாக்குங்க நண்பர்களே!
News December 18, 2025
விஜய் பரப்புரையில் சிக்கி 3 பேர் ICU-வில் சிகிச்சை

ஈரோட்டில் நடந்த விஜய்யின் பரப்புரையின் போது உடல்நலக் குறைவு ஏற்பட்டு, 3 பேர் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிலும், அவர்கள் ICU-வில் சிகிச்சையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வலிப்பு, மயக்கம், உடல் சோர்வு ஆகிய காரணங்களால் அவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஒரு பெண் உள்பட மேலும் சிலர் கூட்டத்திலேயே மயங்கி விழுந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
News December 18, 2025
யார் இளம் பெரியார்? ஆதவ் அர்ஜுனா காட்டம்

இளைஞர்களே இல்லாத ஒரு இளைஞரணி மாநாட்டை திமுக நடத்தியதாக ஆதவ் அர்ஜுனா விமர்சித்துள்ளார். DCM உதயநிதிக்கு இளம் பெரியார் என்று அமைச்சர் எ.வ.வேலு பட்டம் சூட்டியதை அவர் கடுமையாக சாடியுள்ளார். சமூகநீதி பற்றி தெரியாத ஒருவரை இளம் பெரியார் என்று அழைப்பது, பெரியாரின் 70 வருட உழைப்பை அவமதிக்கும் செயல் என அவர் தெரிவித்தார். மேலும், பெரியாரின் வரலாற்றை அறியாதவர் உதயநிதி என்றும் ஆதவ் பேசினார்.


