News October 2, 2025
Cinema Roundup: விஜய் சேதுபதி படத்திற்கு ‘SLUMDOG’ தலைப்பு

*ஸ்ரத்தா ஸ்ரீநாத்தின் ‘தி கேம்: யு நெவர் பிளே அலோன் தொடர்’ நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. மம்மூட்டி நடிக்கும் ‘பேட்ரியாட்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. *விஜய் சேதுபதியின் அடுத்த படத்திற்கு ‘SLUMDOG’ என தலைப்பு சூட்டப்பட்டுள்ளதாக தகவல். *முகேன் ராவ் நடிக்கும் ‘நிறம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது. *பவன் கல்யாணின் ‘ஓஜி’ படம் இதுவரை ₹245.50 கோடி வசூலித்துள்ளது.
Similar News
News October 2, 2025
விஜய் அலுவலகத்தில் ஆயுத பூஜை கொண்டாட்டம்

சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் இன்று ஆயுத பூஜை கொண்டாடப்பட்டுள்ளது. விஜய்யின் பரப்புரை பஸ், வேனுக்கு வாழை மரங்கள் கட்டி பூஜை செய்யப்பட்டுள்ளது. அந்த போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் வெளியானதை அடுத்து, 41 உயிர்களை குடித்த வாகனத்திற்கு பூஜையா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேநேரத்தில், இதிலுமா அரசியல் செய்வீர்கள் என விஜய்க்கு ஆதரவாகவும் பலர் குரல் கொடுத்துள்ளனர். உங்கள் கருத்தென்ன?
News October 2, 2025
IND Vs WI டெஸ்ட் மழையால் பாதிப்பு

மழை குறுக்கீடு காரணமாக இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் தடைபட்டது. வெஸ்ட் இண்டீஸ் அணி 162 ரன்களுக்கு சுருண்ட நிலையில், இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. தற்போது 12.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி இந்தியா 23 ரன்கள் எடுத்துள்ளது. கேஎல் ராகுல் 18 ரன்னும், ஜெய்ஸ்வால் 4 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர். மழை நின்றதால் சற்றுமுன், ஆட்டம் மீண்டும் தொடங்கியுள்ளது.
News October 2, 2025
₹4 கோடி இழப்பீடு: youtube மீது ஐஸ்வர்யா ராய் வழக்கு

யூடியூப், கூகுள் நிறுவனங்கள் மீது, ₹4 கோடி இழப்பீடு கோரி அபிஷேக் – ஐஸ்வர்யா ராய் பச்சன் தம்பதி டெல்லி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். AI டீப் பேக் மூலம் தங்கள் முகங்கள் யூடியூபில் தவறாக பயன்படுத்தப்படுவதாகவும், தங்கள் முகங்களை வைத்து சட்டவிரோதமாக உருவாக்கப்பட்டுள்ள ஆபாச வீடியோக்களை உடனடியாக நீக்க வேண்டும் எனவும் மனுவில் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.