News October 2, 2025
Cinema Roundup: SK ஜோடியாக நடிக்கும் ரஷ்மிகா மந்தனா

*’மூக்குத்தி அம்மன் 2′ படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று காலை 10.05 மணிக்கு வெளியாகிறது. *சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் ஹீரோயினாக ரஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார். *விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது. *ஜூனியர் என்.டி.ஆரின் ‘தேவரா 2’ படத்தில் சிம்புவை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
Similar News
News October 2, 2025
BREAKING: விஜய் உடன் திமுக டீலிங்கா? திருமா

‘என் மீது கை வையுங்கள்’ என விஜய் சவால் விடுத்தும், அவர் மீது வழக்குப்பதிவு செய்யாதது ஏன் என்று திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். விஜய், ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப்பதிவு செய்ய அரசும், காவல் துறையும் அச்சப்படுகிறதா அல்லது திமுக அரசுக்கும், விஜய்க்கும் மறைமுக டீலிங்கா என்ற கேள்வி எழுகிறது. அவர் மீது வழக்குப்பதியாதது குறித்த காரணத்தை காவல்துறை சொல்ல வேண்டும் என வலியுறுத்தினார்.
News October 2, 2025
விஜய்யை வைத்து பாஜக போடும் பிளான் இதுவே: திருமா

விஜய் ஆபத்தான அரசியலை கையில் எடுத்திருப்பதாக திருமா சாடியுள்ளார். கொள்கை எதிரியாக அறிவித்தும், விஜய்யை பாதுகாக்க பாஜக வருவது சந்தேகத்தை எழுப்புவதாக கூறிய அவர், பாஜகவின் தூண்டுதலால் தான் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார் எனவும் பேசியுள்ளார். மேலும், விஜய்யை பாஜக கூட்டணியில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள் எனவும், தனியாக நிற்கவைத்து வாக்குகளை பிரிப்பதே அவர்களது நோக்கம் என்றும் தெரிவித்துள்ளார்.
News October 2, 2025
கரூர் துயரம்.. உதவிகளை அறிவித்தார் விஜய் தொண்டர்

கரூர் துயரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தவெக சார்பில் உதவி செய்யப்படும் என்று அக்கட்சியின் மரிய வில்சன் அறிவித்துள்ளார். கரூர் துயரத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஈடாக நாம் எதையும் செய்துவிட முடியாது. ஆனால், அவர்களின் கனவுகளை நிறைவேற்ற துணை நிற்க முடியும். அந்த வகையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தேவையான பள்ளி, கல்லூரி செலவுகளை ஏற்பதாகவும், வேலை வாய்ப்பை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.