News October 11, 2025
Cinema Roundup: சிம்புவுடன் நடிக்கவில்லை: கிச்சா சுதீப்

*கல்கி 2-ம் பாகத்தில் தீபிகா படுகோனுக்கு பதிலாக ஆலியா பட் நடிக்கவுள்ளதாக தகவல். *’பைசன்’ படத்தின் டிரெய்லர் அக்.13-ம் தேதி வெளியாகிறது. * நானியின் ‘தி பாரடைஸ்’ படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றப்படவுள்ளது. *’அரசன்’ படத்தில் வில்லனாக நடிக்கவில்லை என்று கிச்சா சுதீப் திட்டவட்டமாக மறுத்துள்ளார். *’இட்லி கடை’ படத்திற்கு வரி விலக்கு அளிக்க TN அரசுக்கு BJP செய்தி தொடர்பாளர் ANS பிரசாத் கோரிக்கை.
Similar News
News October 11, 2025
நெல் ஈரப்பத வரம்பை 25%ஆக அதிகரியுங்கள்: அன்புமணி

நெல்லுக்கான ஈரப்பத வரம்பை 25%ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும TN அரசை அன்புமணி வலியுறுத்தியுள்ளார். விதிகளின்படி 17% ஈரப்பதம் உள்ள நெல்மணிகளை மட்டுமே கொள்முதல் செய்ய முடியும் என்ற நிலையில், இது தொடர்பாக TN அரசு மத்திய அரசிடம் பேசி அனுமதி பெற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதால் கொள்முதல் பணிகளை துரிதப்படுத்த அவர் வலியுறுத்தியுள்ளார்.
News October 11, 2025
கரூர் துயரம்: TN அரசுக்கு கேள்விகளை அடுக்கிய SC

கரூர் துயரத்தில், 40 பேரின் உடல்களை சம்பவம் நடந்த 5 மணி நேரத்திற்குள் உடற்கூராய்வு செய்ததாக SC-ல் இறந்தவர்கள் தரப்பு தெரிவித்தது. இதையடுத்து இரவே உடற்கூராய்வு முடித்தது எப்படி? ஹாஸ்பிடலில் உடற்கூராய்வு டேபிள்கள் எத்தனை இருந்தன? டாக்டர்கள் தான் உடற்கூராய்வு செய்தார்களா என்று TN அரசுக்கு SC கேள்வி எழுப்பியது. இதுபற்றி பிராமண பத்திரம் தாக்கல் செய்வதாக தமிழக அரசு தரப்பு உறுதியளித்தது.
News October 11, 2025
போர் நிறுத்தம்: பயணத்தை தொடங்கிய பாலஸ்தீனியர்கள்

இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளதால் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் வடக்கு காசாவை நோக்கி நகர தொடங்கியுள்ளனர். இஸ்ரேல் படைகள் பின்வாங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் சற்று நிம்மதியோடு பாலஸ்தீனியர்கள், தங்களது சொந்த இடங்களுக்கு சாரை சாரையாக திரும்புகின்றனர். புகைப்படங்களை பார்க்க SWIPE செய்யவும்.