News October 1, 2025
Cinema Roundup: தெலுங்கு சினிமாவில் மீண்டும் நயன்தாரா

*பிரதீப் ரங்கநாதனின் ‘டியூட்’ படம் அக்.17-ம் தேதி ரிலீசாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு. *ஜீவாவின் அடுத்த படத்திற்கு ‘தலைவர் தம்பி தலைமையில்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. *சிரஞ்சீவியின் புதிய படத்தில் சசிரேகா என்ற கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார். *கமலின் ‘நாயகன்’ படம் நவ.6-ல் ரீ-ரிலீசாகிறது. * நடிகை டிம்பிள் ஹயாத்தி தன்னை அடித்து துன்புறுத்தியதாக அவர் வீட்டு பணிப்பெண் போலீசில் புகார்.
Similar News
News March 28, 2026
தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று 28.03.2026 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
News March 28, 2026
வளைகுடா நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை

வளைகுடா நாடுகளின் வான்வெளியை பயன்படுத்தி, ஈரான் மீது US – இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதை அந்நாட்டு அதிபர் பெசஷ்கியான் கண்டித்துள்ளார். குவைத், சவுதி உள்ளிட்ட நாடுகள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்றால், தங்கள் வான்வெளியை பயன்படுத்த US-க்கு அனுமதி அளிக்க கூடாது எனவும் தெரிவித்துள்ளார். ஈரானின் அணுசக்தி மையங்கள் குறிவைக்கப்பட்டால், அமைதியாக இருக்க மாட்டோம் என்றும் எச்சரித்துள்ளனர்.
News March 28, 2026
திமுக – பாஜக நேரடியாக மோதும் தொகுதிகள்

வரும் தேர்தலில் 18 தொகுதிகளில் திமுக – பாஜக நேருக்கு நேர் மோதுகின்றன. வாசுதேவநல்லூர், ராதாபுரம், நாகர்கோவில், திருப்பத்தூர், மானாமதுரை, சாத்தூர், ராமநாதபுரம், திருச்செந்தூர், அவிநாசி, திருப்பூர் தெற்கு, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ஆவடி, மயிலாப்பூர், தி.மலை, ராசிபுரம், கோவை வடக்கில் உதயசூரியனும் தாமரையும் நேரடியாக களம்காண்கின்றன. <<-se>>#TNElection2026<<>>


