News August 22, 2025

CINEMA ROUNDUP: 27-ம் தேதி வெளிவரும் ‘LIK’ டீசர்!

image

★பிரதீப் ரங்கநாதனின் ‘LIK’ படத்தின் First Punch வரும் 27-ம் தேதி வெளியாகிறது. படம் அக். 17-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
★அசோக் செல்வனின் ‘18 Miles(தாரணா)’ படத்தின் கிளிம்ப்ஸ் இன்று வெளியாகிறது.
★மலையாள நடிகர் ஷேன் நிகம் நடிக்கும் ‘பல்டி’ படத்தில் இருந்து செல்வராகவனின் ஃபர்ஸ்ட் லுக் வெளிவந்துள்ளது.
★பெரும் வரவேற்பை பெற்ற ‘தலைவன் தலைவி’ படம் அமேசான் பிரைம் OTT-ல் வெளியானது.

Similar News

News March 24, 2026

காஞ்சிபுரம்: வேகமாக பரவும் வைரஸ் தொற்று!

image

பருவநிலை மாற்றத்தால் சென்னை, திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் காய்ச்சல், சளி, இருமல் போன்ற நோய்களால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் ‘மெட்ராஸ் ஐ’ எனப்படும் கண் நோயும் பரவி ஏராளமானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையை அலட்சியம் செய்யாமல் உடனடி மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

News March 24, 2026

எந்தெந்த தொகுதியில் போட்டி.. நள்ளிரவிலும் BJP ஆலோசனை

image

சென்னை கமலாலயத்தில் நள்ளிரவு ஒரு மணி வரை எல்.முருகன், நயினார், தமிழிசை உள்ளிட்டோருடன் பியூஷ் கோயல் ஆலோசனை மேற்கொண்டார். அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடலாம் என்பது ஆலோசிக்கப்பட்டுள்ளது. அப்போது, கொங்கு மண்டலத்தில் அண்ணாமலை, வானதியும், தென் மாவட்டத்தில் நயினார், தமிழிசை உள்ளிட்டோர் போட்டியிடுவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டுள்ளது.

News March 24, 2026

தங்கம் விலை தலைகீழாக குறைந்தது

image

சர்வதேச சந்தையில் தொடர் சரிவில் உள்ள தங்கம், இன்று 1 அவுன்ஸ் $130.98(இந்திய மதிப்பில் 12,225) குறைந்துள்ளது. இதனால், 2.74% வீழ்ச்சியடைந்து $4,367-க்கு விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த பெரும் சரிவால், இந்திய சந்தையில் தங்கம் விலை மிகப்பெரிய அளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, சென்னையில் 1 கிராம் ₹13,340-க்கும், 1 சவரன் ₹1,06,720-க்கும் விற்கப்பட்டு வருகிறது.

error: Content is protected !!