News October 27, 2025
Cinema Roundup: ‘காந்தாரா’ OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு

*VJ சித்து இயக்கி நடிக்கும் ‘டயங்கரம்’ படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கியது. *‘காந்தாரா: சாப்டர் 1’ படம் வரும் 31-ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகிறது. *‘NEEK’ பட ஹீரோ பவிஷின் அடுத்த படம் பூஜையுடன் தொடங்கியது. *₹15 கோடி சம்பளம் கேட்பதாக வெளியான தகவலை மமிதா பைஜி மறுத்துள்ளார். *ஜாக்கிசானுடன் ஹிரித்திக் ரோஷன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரல்.
Similar News
News October 27, 2025
ஆஸி., வீராங்கனைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

இந்தியாவில் ODI WC-யில் விளையாடிவரும் <<18100854>>ஆஸி., வீராங்கனைகளிடம்<<>>, சமீபத்தில் அத்துமீறப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், அவர்களுக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. ஹோட்டலை விட்டு கஃபேக்கு சென்ற போது அத்துமீறிய அவலம் நடந்ததால், இனி வீராங்கனைகள் வெளியில் செல்லும் போது, போலீசாரிடம் கூற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News October 27, 2025
BREAKING: விஜய் முக்கிய முடிவு

கரூர் துயரில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்த விஜய், அடுத்தக்கட்ட பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். அவரது அரசியல் சுற்றுப்பயணம் விரைவில் தொடங்கும் என CTR நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். கோர்ட் உத்தரவின்படி, அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டுதல் விதிகளை அறிவித்தவுடன், உரிய அனுமதி பெற்று விஜய்யின் சுற்றுப்பயண விவரம் வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
News October 27, 2025
வாக்குரிமை பறிப்பை தடுப்போம்: CM ஸ்டாலின்

அவசரகதியில் செய்யப்படும் SIR நடவடிக்கை, பாஜகவுக்கு சாதகமாக தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் சதி என்று CM ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். பருவமழைக் காலமான நவம்பர், டிசம்பரில் SIR நடவடிக்கை மேற்கொள்வது சவால்கள் நிறைந்தவை என்று அவர் X-ல் பதிவிட்டுள்ளார். மேலும், மக்களின் வாக்குரிமையை பறிக்க துணியும் இந்த ஜனநாயகப் படுகொலையை எதிர்த்து தமிழகம் போராடும், வெல்லும் என்றும் அவர் கூறியுள்ளார்.


