News October 30, 2025

Cinema Roundup: டிஸ்னியின் ‘zootopia 2’ தமிழில் ரிலீஸ்

image

*அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தில் மிருணாள் தாகூர் இணைந்துள்ளதாக தகவல். *டிஸ்னியின் ‘zootopia 2’ தமிழில் வரும் நவ.28-ம் தேதி ரிலீசாக உள்ளது. *‘பென்ஸ்’ படத்தில் ராகவா லாரன்ஸிற்கு ஜோடி இல்லையாம். *‘பியார் பிரேமா காதல்’ பட இயக்குநர் இயக்கி, நடிக்கும் படத்தில் ‘குடும்பஸ்தன்’ நாயகி நடிக்கிறாராம். *ராகவா லாரன்ஸின் சொத்து மதிப்பு ₹100 கோடி என தகவல்.

Similar News

News October 30, 2025

கலிலியோ பொன்மொழிகள்

image

*உங்களால் ஒரு மனிதனுக்கு எதையும் கற்றுக்கொடுக்க முடியாது, அவன் அதை தனக்குள்ளே தேடிக்கொள்ள மட்டுமே உதவ முடியும்.
*அனைத்து உண்மைகளும் எளிதில் புரிந்துகொள்ள கூடியவையே, ஆனால் முதலில் அதை கண்டுபிடிக்க வேண்டும்.
*உங்களை நீங்கள் அறிவதே மிகச் சிறந்த ஞானம்.
*அளவிடக்கூடியதை அளவிடுங்கள், அளவிட முடியாததை அளவிடக் கூடியதாக ஆக்குங்கள்.

News October 30, 2025

ராமரே இல்லை என காங்., கூறுகிறது: யோகி ஆதித்யநாத்

image

கடவுள் ராமர் என்பவரே இல்லை என கூறும் காங்., இறைவனின் இருப்பையே கேள்விக்குள்ளாக்குவதாக உ.பி., CM யோகி ஆதித்யநாத் விமர்சித்துள்ளார். ராமரின் தேரை லாலு பிரசாத் யாதவ்வின் RJD நிறுத்தியதாகவும், சமாஜ்வாதி கட்சி ராம பக்தர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் கடுமையாக சாடினார். பிஹார் தேர்தல் பிரசாரம் கடும் மோதல் போக்கில் உள்ள நிலையில், மகாபந்தன் கூட்டணியை தாக்கி யோகி கூறியது பேசுபொருளாகியுள்ளது.

News October 30, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துதெளிதல் ▶குறள் எண்: 504 ▶குறள்: குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல். ▶பொருள்: ஒருவரின் குணங்களையும், அவரது குறைகளையும் ஆராய்ந்து பார்த்து அவற்றில் மிகுதியாக இருப்பவை எவை என்பதைத் தெரிந்து அதன் பிறகு அவரைப் பற்றிய ஒரு தெளிவான முடிவுக்கு வர வேண்டும்.

error: Content is protected !!