News August 27, 2025

CINEMA ROUNDUP: மாலை 5 மணிக்கு தனுஷின் சர்ப்ரைஸ்!

image

‘இட்லி கடை’ படத்தின் ‘என்சாமி தந்தானே’ பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளிவருகிறது.
★மோகன் ஜீ இயக்கத்தில் உருவாகி வரும் ‘திரெளபதி பார்ட் 2’ ஃபர்ஸ்ட் லுக் வெளிவந்துள்ளது.
★சூரியின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘மண்டாடி’ படத்தில் இருந்து சிறப்பு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
★ரவி அரசு இயக்கும் ‘மகுடம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு. படத்தில் 3 கெட்டப்பில் விஷால் நடிக்கிறார்.

Similar News

News March 9, 2026

தஞ்சை: பேருந்து தடம்புரண்டு விபத்து

image

பட்டுக்கோட்டையிலிருந்து தஞ்சாவூர் நோக்கி வந்த தனியார் பேருந்து, நேற்று மாலை சுமார் 5 மணியளவில் கரம்பயம் மீனாட்சி சந்திரசேகரன் கல்லூரி அருகே விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டது. பேருந்தின் சக்கரங்களுக்கு இடையேயான இரும்புத் தகடு உடைந்ததால் வாகனம் நிலைதடுமாறி அருகிலுள்ள பள்ளத்தில் பாய்ந்தது. இந்த நிலையில், ஓட்டுநர் சமர்த்தியதால் அனைவரும் உயிர்தப்பினர். பெரிய விபத்து தவிர்க்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

News March 9, 2026

மாணவர்கள் கல்வியில் சிறக்க சொல்ல வேண்டிய மந்திரம்!

image

ஓம் வாக்தேவ்யைச வித்மஹே விரிஞ்சி பத்ந்யைச தீமஹி தந்நோ வாணி: ப்ரசோதயாத் பொருள்: பேச்சின் தெய்வத்தை நாம் தியானிக்கிறோம், ஆசைகளை நிறைவேற்றுபவர் மீது நாம் கவனம் செலுத்துகிறோம், தெய்வீகம் நம்மை ஊக்கப்படுத்தி வழிகாட்டட்டும். (இந்த மந்திரத்தை சொல்வதோடு பாட புத்தகத்தை படிக்க வேண்டியதும் அவசியம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்) SHARE IT.

News March 9, 2026

சர்வதேச சந்தையில் தங்கம் விலை சரசரவென குறைந்தது!

image

சர்வதேச சந்தையில் தங்கம் விலை 1 அவுன்ஸ்(28g) $106(இந்திய மதிப்பில் ₹9,745) குறைந்து $5,045-க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலையும் 1 அவுன்ஸ் $3 குறைந்து $81 ஆக உள்ளது. இதன் தாக்கத்தால் இந்திய சந்தையில் தங்கம் விலை இன்று காலை நேர வர்த்தகத்தில் கணிசமாக குறைய வாய்ப்புள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் தங்கம் சவரனுக்கு ₹5,800 குறைந்தது கவனிக்கத்தக்கது. SHARE IT.

error: Content is protected !!