News November 6, 2025

Cinema Roundup: ‘D54’ ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ கசிந்தது

image

*‘பராசக்தி’ முதல் சிங்கிள் ‘அடி அலையே’ நாளை மாலை 5:30-க்கு வெளியாகும். *அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள ‘தீயவர் குலை நடுங்க’ வரும் 21-ம் தேதி வெளியாகும். *ஸ்ரீகாந்த், ஷாம் நடிக்கும் ‘தி ட்ரெய்னர்’ படம் வெளியீட்டுக்கு தயாரானது. *‘போர் தொழில்’ இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ இணையத்தில் கசிந்தது. *‘கைதி’ மலேசிய ரீமேக் நாளை வெளியாக உள்ளது.

Similar News

News February 13, 2026

2026 Election: தேர்தல் ஆணையம் அறிவித்தது

image

தமிழக தேர்தல் தேதி அறிவிக்கப்படும் வரை, EVM & VVPAT இயந்திரம் பயன்படுத்துவது குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என ECI அறிவித்துள்ளது. இதற்காக கலெக்டர், சப்-கலெக்டர் & வருவாய் கோட்ட அலுவலர் அலுவலகங்களில் செயல்முறை விளக்க மையங்கள் மற்றும் நடமாடும் செயல் விளக்க வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களே பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

News February 13, 2026

இரவில் இதை செய்தால் பிரச்னை தான்!

image

இரவில் லைட்டுகளை போட்டுக்கொண்டே தூங்கும் பழக்கம் பலருக்கும் உண்டு. ஆனால் இப்படி தூங்குவதால் பல உடல்நலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புண்டு என ஆய்வுகள் கூறுகின்றன. குறிப்பாக உடல்பருமன், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். ஏனென்றால் தூங்கும்போது செயல்படும் மெலடோனின் ஹார்மோன் வெளிச்சத்தில் செயல்படாது. இரவில் செல்போன் அல்லது டிவி பார்ப்பதும் பிரச்சனை தான். இன்றே மாறலாமே?

News February 13, 2026

தியேட்டரில் வேண்டுமானால் விசிலடிக்கலாம்: சிவி சண்முகம்

image

என்றைக்கும் திமுகவுக்கும், அதிமுகவுக்கு தான் போட்டியே என CV சண்முகம் பேசியுள்ளார். மூப்பனார், வைகோ, விஜயகாந்த் ஆகியோர் வந்தனர்.. சென்றனர். இன்றைக்கு திமுகவிடம் பிச்சையெடுக்கும் கமலை அன்று மாற்றுசக்தி என்றனர். அவரும் டார்ச் லைட் அடித்துவிட்டு போய்விட்டார் என்றார். மேலும் இன்று தியேட்டரில் வேண்டுமானால் விசிலடிக்கலாம், ஆனால் அதிமுகவுக்கு வாக்களிப்பதை யாராலும் நிறுத்த முடியாது என கூறியுள்ளார்.

error: Content is protected !!