News October 6, 2025

Cinema Roundup: பாலிவுட் செல்கிறார் ‘அமரன்’ இயக்குநர்

image

*’அமரன்’ ராஜ்குமார் பெரியசாமி அடுத்ததாக இந்தியில் விக்கி கெளஷலை வைத்து படம் இயக்கவுள்ளதாக தகவல். *ஜீவாவின் அடுத்த படத்தில் ‘NEEK’ ரம்யா ரங்கநாதன் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். *கண்ணா ரவியின் ‘வேடுவன்’ வெப் தொடர் ஜீ5 ஓடிடியில் அக்.10 முதல் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது. *பவன் கல்யாணின் ‘OG’ படத்தின் ப்ரீக்வெல், சீக்வெல் வெளியாகும் என இயக்குநர் சுஜீத் அறிவிப்பு.

Similar News

News October 6, 2025

பிஹாருக்கு இன்று தேர்தல் தேதி அறிவிப்பா?

image

பிஹார் மாநிலத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று மாலை 4 மணிக்கு தலைமை தேர்தல் ஆணையர் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். பிஹாரில் கடும் போட்டி இருக்கும் 59 தொகுதிகளில் பெரும்பாலான பெண் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்ற காங்., புகார் குறித்து விளக்கமளிக்கும் தேர்தல் ஆணையர், தேர்தல் தேதியை வெளியிட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

News October 6, 2025

BREAKING: தங்கம் விலை வரலாறு காணாத மாற்றம்

image

ஆபரண தங்கத்தின் விலை ₹88 ஆயிரத்தை கடந்து வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹880 உயர்ந்து ₹88,480-க்கும், ஒரு கிராம் தங்கம் விலை ₹110 உயர்ந்து ₹11,060-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

News October 6, 2025

ஆட்சியில் பங்கு, அதிக சீட்.. ராஜேஷ்குமார்

image

ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது ஒவ்வொரு காங்., தொண்டரின் விருப்பம்; அதையே நாங்கள் பிரதிபலிக்கிறோம் என்று காங்., சட்டமன்றக் குழுத் தலைவர் ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார். 1967-க்கு பிறகு காங்., ஆட்சியில் இல்லை. ஆனாலும் எங்களுக்கு அதிகப்படியான சீட்டுகள் தர வேண்டும்; காங்., கட்சி அங்கம் வகிக்கக்கூடிய அரசு வரவேண்டும் என்று தலைமையிடம் வலியுறுத்தி வருகிறோம். தலைமை அதுகுறித்து முடிவெடுக்கும் என்றார்.

error: Content is protected !!