News November 3, 2025
Cinema Roundup: தனுஷுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே

*ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் தனுஷுக்கு ஜோடி ஆகிறார் பூஜா ஹெக்டே. *கமலஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு ‘நாயகன்’ ரீ-ரிலீசாகிறது. *நவ.14-ம் தேதி முதல் நெட்பிளிக்ஸில் ‘டியூட்’ ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது. *கிஷென் தாஸின் ‘ஆரோமலே’ படத்திற்கு U/A சான்றிதழ் தரப்பட்டுள்ளது. *’பராசக்தி’ முதல் சிங்கிள் இந்த வாரம் வெளியாகும் என ஜி.வி.பிரகாஷ் குமார் அறிவிப்பு. *விக்ரம் 63-ல் மீனாட்சி செளத்ரி நடிக்கவுள்ளார்.
Similar News
News November 3, 2025
₹20 லட்சம்…உடனே அப்ளை பண்ணுங்க!

பள்ளி மாணவர்கள், இளங்கலை, முதுகலை, மருத்துவம், IIT, IIM & வெளிநாட்டில் உயர்கல்வி பயில்பவர்களுக்கு ₹15,000-₹20 லட்சம் வரை Platinum Jubilee Asha Scholarship-ஐ SBI வழங்குகிறது . இதற்கு, குடும்ப ஆண்டு வருமானம், பள்ளி மாணவர்களுக்கு ₹3 லட்சம், மற்றவர்களுக்கு ₹6 லட்சத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும். இதில் பயனடைய sbiashascholarship.co.in – ல் நவ.15-க்குள் விண்ணப்பியுங்கள். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News November 3, 2025
ஸ்டாலின் மீண்டும் CM நாற்காலியில் அமர்வார்: திருமா

மீண்டும் ஸ்டாலினை முதல்வர் நாற்காலியில் அமர வைப்போம் என்று திருமாவளவன் உறுதிபட தெரிவித்துள்ளார். தருமபுரியில் திருமண நிகழ்ச்சியில் பேசிய அவர், திமுக தோழர்களோடு, விடுதலை சிறுத்தைகளும் களத்தில் நின்று, 234 தொகுதிகளையும் வெல்வோம் என்று குறிப்பிட்டார். பெரியாரை கொச்சைப்படுத்தும் சக்திகளோடு அதிமுக கைகோர்த்து நிற்பதாக விமர்சித்த திருமா, இது MGR, ஜெ.,-வுக்கு செய்யும் துரோகம் என்றும் கூறினார்.
News November 3, 2025
மகளிர் உரிமைத்தொகை ₹1,000.. உதயநிதி புதிய அறிவிப்பு

மகளிர் உரிமைத்தொகைக்கு கூடுதலாக அப்ளை செய்தோரின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளதாகவும், அடுத்த மாதம் தகுதியானோருக்கு ₹1,000 வழங்கப்படும் எனவும் DCM உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். ராணிப்பேட்டையில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய அவர், தற்போது, 1.20 கோடி மகளிருக்கு மாதந்தோறும் ₹1,000 வழங்கப்படுவதோடு, மகளிர் முன்னேற்றத்திற்கு எண்ணற்ற திட்டங்களை திராவிட மாடல் அரசு நிறைவேற்றியுள்ளதாக கூறினார்.


