News February 28, 2026
CINEMA ROUNDUP: ஜாக்பாட் அடித்த ‘தாய் கிழவி’

ராதிகாவின் ‘தாய் கிழவி’ படம் முதல் நாளில் ₹2.5 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது *யஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாக்ஸிக்’ படம் 3 மணி நேரம் 25 நிமிடங்கள் நீளம் கொண்டது என தகவல் வெளிவந்துள்ளது *மார்ச் 19-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட ‘LIK’ ஏப்ரலுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாம் *மறைந்த நடிகை செளந்தர்யாவின் பயோபிக்கில் நடிக்க ஆசை உள்ளதாக பிரியங்கா மோகன் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 3, 2026
கல்லீரலை பாதுகாக்க இரவில் 3 விசயங்களை கடைபிடிங்க!

இந்தியாவில் 40% பேருக்கு கல்லீரல் பாதிப்பு உள்ளதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. அதனை தடுக்க இந்த 3 பழக்கங்களை பின்பற்றுமாறு டாக்டர்கள் கூறுகின்றனர். அதன்படி இரவு 9 மணிக்குள்ளாக சாப்பிட வேண்டும். இதனால் கல்லீரலில் கொழுப்பு சேர்வது தடுக்கப்படும். புரத சத்து உணவை உண்பதும், சாப்பிட்டு முடித்து சிறிது நேரம் நடப்பதும் கல்லீரலுக்கு ஆரோக்கியம் தரும் என அறிவுறுத்துகின்றனர்.
News March 3, 2026
ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் ₹1 லட்சம் அறிவிப்பு!

பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், ₹1 லட்சம் தரும் ‘டெல்லி லட்சாதிபதி மகள்’ திட்டத்தை டெல்லி CM ரேகா குப்தா அறிவித்துள்ளார். பிறக்கும்போது ₹11,000, 1, 6, 9, 10 மற்றும் 12-ம் வகுப்பு ஆகியவற்றை முடிக்கும்போது தலா ₹5,000, டிகிரி முடிக்கும்போது ₹20,000 என வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். அதனை வட்டியுடன் சேர்த்து ஒரு லட்சமாக அந்த பட்டதாரி பெண் பெறலாம். இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?
News March 3, 2026
ராசி பலன்கள் (03.03.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.


