News August 7, 2025
CINEMA ROUND UP: ஹீரோவாகும் ஷங்கர் மகன்..

➤இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கர், அட்லீயின் AD இயக்கும் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார்.
➤அருண் விஜய்யின் ‘ரெட்ட தல’ படத்தின் டீசர் இன்று வெளியாகிறது.
➤ராகவா லாரன்ஸ் தம்பி எல்வின் ஹீரோவாக நடித்துள்ள ‘புல்லட்’ படத்தின் டீசர் வரும் 8-ம் தேதி வெளியாகிறது.
➤சிவாஜி கணேசனின் பேரனும், ராம்குமாரின் மகனுமான தர்ஷன் கணேசன் ஹீரோவாக களமிறங்கியுள்ளார்.
Similar News
News August 9, 2025
பணம் கொடுத்து ட்ரோல் செய்கிறார்கள்: ரஷ்மிகா

நடிகை ரஷ்மிகா மந்தனா, தனக்கு எதிராக டிரோல் செய்வதற்கு பணம் கொடுக்கப்படுகிறது என பகீர் புகார் தெரிவித்துள்ளார். சிலர் ஏன் இவ்வளவு கொடூரமாக இருக்கிறார்கள் என்பது தனக்கு புரியவில்லை என்றும், இது தன்னை வளரவிடாமல் தடுக்கும் முயற்சி எனவும் தெரிவித்துள்ளார். தன் மீது அன்பு காட்டவில்லை என்றாலும் பரவாயில்லை, அமைதியாக இருங்கள் என வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
News August 9, 2025
₹500 நோட்டுகள் செல்லாதா?.. மத்திய அரசு விளக்கம்

ATM-களில் ₹500 நோட்டுகள் செப்.30 முதல் நிறுத்தப்படும் என்றும் அதன்பின் ₹500 நோட்டுகள் ரத்து செய்யப்படும் எனவும் தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து பார்லிமென்டில் விளக்கமளித்த மத்திய நிதியமைச்சகம், அது வதந்தி எனத் தெரிவித்துள்ளது. ATM-களில் செப்டம்பருக்குள் ₹100, ₹200 நோட்டுகள் 75% கிடைப்பதை உறுதி செய்யவும், 2026 மார்ச்சில் அதனை 90%ஆக அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
News August 9, 2025
ராகுல் MP பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்: பாஜக

லோக்சபா தேர்தலில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்ததாக ராகுல் அண்மையில் குற்றஞ்சாட்டினார். இதற்கு பதிலளித்த EC அவரிடமுள்ள ஆதாரங்களை உறுதிமொழி பத்திரங்களாக வழங்கும்படி தெரிவித்த நிலையில், ராகுல் அதற்கு மறுத்துவிட்டார். இந்நிலையில், உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்யாத ராகுல், EC மீது கேள்வி எழுப்பும் சோனியா, பிரியங்கா ஆகியோர் MP பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென பாஜக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.