News August 6, 2025
CINEMA ROUND UP: நஸ்ரியா கேரக்டரில் நயன்தாரா:

*சிவகார்த்திகேயன் குரலில் ‘ஓ காட் பியூட்டிபுல்’ படத்தின் முதல் சிங்கிள் ப்ரோமோ வெளியானது.
*’கிங்டம்’ திரைப்பட விவகாரத்தில் ஜனநாயக ரீதியாக போராட வேண்டுமென HC அறிவுறுத்தியுள்ளது. *சிம்பு நடித்த ‘இது நம்ம ஆளு’ படத்தில் நயன்தாரா கேரக்டரில் நஸ்ரியா தான் முதலில் நடிக்க இருந்ததாக இயக்குநர் பாண்டிராஜ் தெரிவித்துள்ளார். *அனுஷ்கா நடித்த காதி திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.
Similar News
News August 7, 2025
BREAKING: மாநில கல்வி கொள்கை நாளை வெளியீடு

தமிழ்நாட்டிற்கான மாநில கல்வி கொள்கையை CM ஸ்டாலின் நாளை வெளியிடுகிறார். ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான குழு, தமிழ்நாடு முழுவதும் ஆய்வு செய்து 650 பக்கங்கள் கொண்ட அறிக்கையை CM-யிடம் சமர்ப்பித்தது. அதில் 3,5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படக் கூடாது உள்ளிட்ட பல அறிவுறுத்தல்களை வழங்கியது. நீண்ட ஆலோசனைக்கு பிறகு, நாளை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை CM வெளியிட உள்ளார்.
News August 7, 2025
இது நடந்தால் மட்டுமே மதிமுக கூட்டணி மாறும்

மதிமுக கூட்டணி மாறும் என மல்லை சத்யா கூறியது, ஏற்கெனவே பொதுவெளியில் அடிபடும் செய்திதான். MP-ஆக இருக்கும் துரை, மத்திய அமைச்சரவையில் பங்குபெற்றால்தான் அரசியல் எதிர்காலம் இருக்கும் என அவர் கணக்கு போடுகிறார். இதனால், அமைச்சர் பதவி உறுதியான பிறகுதான் கூட்டணி மாறும் முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. தேர்தலுக்கு 8 மாதம் இருப்பதால், அதற்குமுன் எதுவும் நடக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
News August 7, 2025
FLASH: அதிமுகவில் இணைந்தனர்

தென்காசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் EPS முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர். அதில், OPS ஆதரவாளர்களான சங்கரன்கோவில் நகர செயலாளர் சோடா சங்கர், சரவணன், வடகரையை சேர்ந்த DMK நிர்வாகி அய்யப்பன், MDMK நிர்வாகி முருகன், சமூக ஆர்வலர் அருண் உள்ளிட்டோர் இருந்தனர். தென் மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக EPS தீவிர பரப்புரை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.