News February 6, 2026

CINEMA 360°: விக்ரமின் ஜோடியாக சுருதிஹாசன்

image

*விமலின் ‘மகாசேனா’ இன்று முதல் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது *சிரஞ்சீவியின் ‘மன சங்கர வர பிரசாத் காரு’ 25 நாள்களில் 375 கோடி வசூலித்துள்ளது *ரவி மோகனின் ‘கராத்தே பாபு’ பட ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது *’சியான் 63′ படத்தில் சுருதி ஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார் *கென் கருணாஸ் நடிக்கும் ‘யூத்’ படத்தின் முதல் பாடல் நாளை ரிலீசாகும் என அறிவிப்பு

Similar News

News February 15, 2026

பெண்களிடம் நயினார் வருத்தம் தெரிவிக்க வேண்டும்: ராமதாஸ்

image

விஜய் – த்ரிஷா பற்றிய நயினாரின் சர்ச்சை பேச்சு தமிழக அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. இந்நிலையில், தனது பேச்சுக்கு தமிழக பெண்களிடம் நயினார் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். நாட்டை தாய்நாடு என்றும், நதிகளுக்கு பெண்களின் பெயரை வைப்பது மட்டும் பெருமையல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், பெண்களுக்கு உரிய மரியாதை கொடுப்பது ஒவ்வொருவரின் கடமை எனவும் தெரிவித்துள்ளார்.

News February 15, 2026

இந்தியா Vs பாகிஸ்தான்.. டாப் 5 சம்பவங்கள்

image

இந்தியா – பாகிஸ்தான் மோதல் என்றாலே விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இவ்விரு அணிகளும் 8 முறை பலப்பரீட்சை நடத்தியுள்ள நிலையில், இந்தியா 7 முறை வெற்றிபெற்று ஆதிக்கம் செலுத்துகிறது. இதில் இந்திய வீரர்களின் தரமான சம்பவங்களையும், மறக்க முடியாத தருணங்களையும் போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை மேலே SWIPE செய்து பார்க்கவும்.

News February 15, 2026

இது CM ஸ்டாலினின் ராஜதந்திரம்: திருமா

image

தேர்தல் நேரத்தில் மகளிர் உரிமைத் தொகை வழங்கக்கூடாது என்று சங்பரிவார் கும்பல் SC-ஐ அணுகிய நேரத்தில், மகளிருக்கு ₹5,000 வழங்கப்பட்டது பாஜகவுக்கு எதிரான ராஜதந்திர நடவடிக்கை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது மகளிர் மேம்பட வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையோடு எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், திமுகவுக்கு எதிரான தகுதியான கூட்டணி இதுவரை அமையவில்லை என்றும் கூறினார்.

error: Content is protected !!