News February 3, 2026
CINEMA 360°: ரீ-ரிலீசாகும் ‘மின்னலே’

*காதலர் தினத்தையொட்டி மாதவனின் ‘மின்னலே’ படம் பிப்.13-ல் ரீ-ரிலீசாகிறது *ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘லக்கி தி சூப்பர்ஸ்டார்’ பிப்.20 முதல் ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது *’துரந்தர் 2′ அப்டேட் இன்று 12:12 மணிக்கு வெளியாகிறது *ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் துல்கர் சல்மான், மிருணாள் தாகூர் இணைந்து நடித்துள்ள ‘பீகி பீகி’ ஆல்பம் யூடியூப்பில் வெளியானது
Similar News
News February 12, 2026
ராஜகண்ணப்பன் பற்றி மக்கள் அறிவர்: பிரேமலதா

தேமுதிக எல்லாம் ஒரு கட்சியா என ராஜகண்ணப்பன் பேசியதற்கு பிரேமலதா பதிலடி கொடுத்துள்ளார். தேமுதிக கண்ணியமான கட்சி என்பதை மக்கள் அறிவார்கள் என்ற அவர், இதை சொன்னவர் எப்படிப்பட்டவர் என்பதும் மக்களுக்கு தெரியும் என்றார். மேலும், இதற்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இவர்களின் வாக்குவாதத்தால் திமுக-தேமுதிக கூட்டணி அமைவதில் பின்னடைவு ஏற்படுமா என கேள்வி எழுந்துள்ளது.
News February 12, 2026
U19 WC-யை வென்ற தமிழக வீரர்கள்.. பாராட்டிய DCM!

ENG அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி <<19069828>>இந்திய அணி<<>>, U-19 ODI WC-யை வென்றது. இந்த அணியில் இடம்பெற்றிருந்த தமிழக வீரர்கள் அம்ப்ரிஷ், தீபேஷ் இருவரையும் நேரில் அழைத்து DCM உதயநிதி பாராட்டியுள்ளார். அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தவர், நினைவுப் பரிசும் வழங்கியுள்ளார். இதுகுறித்து பதிவில், சிறப்பான திறமையை இவர்கள் வெளிப்படுத்தி வருவது நம் அனைவருக்கும் பெருமை என்று குறிப்பிட்டுள்ளார்.
News February 12, 2026
BIG NEWS: விஜய்யை கூட்டணிக்கு அழைத்த தமிழிசை!

திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் விஜய், NDA கூட்டணியில் இணை வேண்டும் என தமிழிசை செளந்தரராஜன் அழைப்பு விடுத்துள்ளார். ஒரு மாதமாக விஜய்யை அதிமுக, பாஜக தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், இந்த திடீர் அழைப்பு முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. கூட்டணி அமைக்காமல் விஜய் 15% வாக்குகள் வாங்கினாலும் அதன் ரிசல்ட் பூஜ்ஜியமாக மாறிவிடும் என தமிழிசை கூறியுள்ளார். உங்கள் கருத்து?


