News February 9, 2026

CINEMA 360°: மீண்டும் கமலுடன் இணையும் SK!

image

*ஜீவாவின்‘தலைவர் தம்பி தலைமையில்’ படம் வரும் 12-ம் தேதி Netflix OTT-ல் வெளியாக உள்ளது *இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அஜித் புதிய படத்தில் நடிக்கலாம் என தகவல் வெளிவந்துள்ளது *‘அமரன்’ பட வெற்றிக்கு பிறகு, கமலின் RKFI தயாரிப்பில் மீண்டும் SK புதிய படத்தில் நடிக்கிறார் என கூறப்படுகிறது * பெரும் வெற்றி பெற்ற ‘ஆவேசம்’ படத்தின் பார்ட் 2-ன் முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

Similar News

News February 21, 2026

திருவள்ளூர், தென்காசியில் இன்று பள்ளிகள் இயங்கும்

image

இன்று (பிப்.21) சனிக்கிழமையாக இருந்தாலும், 2 மாவட்டங்களில் பள்ளிகள் செயல்படும் என கலெக்டர்கள் அறிவித்துள்ளனர். அதாவது, திருவள்ளூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பாட அட்டவணையை பின்பற்றி அனைத்து வகை பள்ளிகளும் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தென்காசி மாவட்டத்தில் 2025 அக்.16 அன்று மழையால் விடுமுறை அளிக்கப்பட்டதை ஈடுசெய்ய, இன்று பள்ளிகள் இயங்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News February 21, 2026

6 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: IMD

image

அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. இதனால், இன்று குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். பிப்.22-ல் திண்டுக்கல், மதுரை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யலாம் என எனவும் கணித்துள்ளது.

News February 21, 2026

விஜய் அமெரிக்கா மாடலில் பரப்புரை: EX அமைச்சர்

image

விஜய்யின் பில்டப் ஓவராக உள்ளது என்பது தொடங்கி, தொடர்ந்து விஜய்யை திண்டுக்கல் சீனிவாசன் கடுமையாக விமர்சித்து வருகிறார். அந்தவகையில் இப்போது தேர்தல் நேரத்தில் அனைத்து கட்சிகளும் பரபரப்பாக உள்ள நிலையில், விஜய் மக்களை சந்திக்கவே இல்லை என அவர் சாடியுள்ளார். மேலும் விஜய் அமெரிக்க மாடலில் டிவி மூலம் பரப்புரை செய்யலாம் என்று இருக்கிறார் போல என விமர்சித்துள்ளார்.

error: Content is protected !!