News February 2, 2026
CINEMA 360°: நாளை ‘அரசன்’ புரோமோ ரிலீஸ்?

*சூர்யாவின் ‘கருப்பு’ படம் வரும் ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது *‘சார்பட்டா பரம்பரை’ & ‘ப்ளூ ஸ்டார்’ படங்களின் எழுத்தாளர் தமிழ்பிரபாவின் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கவுள்ளார் *STR பிறந்தநாளை முன்னிட்டு, நாளை ‘அரசன்’ பட புரோமோ வெளியாகலாம் என கூறப்படுகிறது *‘லெஜண்ட்’ சரவணன் நடித்துள்ள அடுத்த படத்தின் அப்டேட் வரும் 4-ம் தேதி மதியம் 2:10-க்கு வெளியாகவுள்ளது.
Similar News
News February 11, 2026
விஜய் ‘டீ’, பாஜக ‘காஃபி’.. அண்ணாமலை

NDA-வில் இன்னும் சில கட்சிகள் இணைய வாய்ப்புள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். அப்போது தவெகவுடன் கூட்டணியா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, விஜய் ’டீ’, நாங்க (பாஜக) ‘காஃபி’.. இரண்டையும் ஒரே பாத்திரத்தில் எப்படி போட முடியும் எனக்கூறி கூட்டணி இல்லை என்பதை உறுதிப்படுத்தினார். மேலும், சிறுபான்மையின மக்களின் வாக்குகளை பெற பாஜக மீது திமுகவினர் மேடைக்கு மேடை பொய் பேசுவதாகவும் சாடினார்.
News February 11, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: மடியின்மை ▶குறள் எண்: 606▶குறள்: படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார் மாண்பயன் எய்தல் அரிது. ▶பொருள்: தகுதியுடையவரின் அன்புக்குப் பாத்திரமானவராக இருப்பினும் சோம்பலுடையவர்கள் பெருமை எனும் பயனை அடைவதென்பது அரிதாகும்.
News February 11, 2026
அதிமுக MP வழக்கில் கோர்ட் காட்டம்!

அதிமுக MP தம்பிதுரையின் பல்கலை., ஆக்கிரமித்துள்ள நிலங்கள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய TN அரசுக்கு சென்னை HC உத்தரவிட்டுள்ளது. தம்பிதுரைக்கு சொந்தமான கல்வி நிறுவனம் & பல்கலை., ஆக்கிரமித்துள்ள அரசு நிலத்தை மீட்க கோரிய வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் தாக்கல் செய்த சர்வே அறிக்கையால் கடும் அதிருப்தியான நீதிபதிகள், 2 வாரங்களில் தங்கள் உத்தரவை நிறைவேற்ற அறிவுறுத்தியுள்ளனர்.


