News April 3, 2026
CINEMA 360°: நயன்தாரா சம்பளம் ₹10 கோடி

*சல்மான் கானின் படத்தில் நடிக்க நயன்தாரா சம்பளமாக ₹10 கோடி வாங்கியுள்ளதாக தகவல் *அஷ்வத் மாரிமுத்து, சிம்பு கூட்டணியில் உருவாகும் படத்தில் 3 முன்னணி கதாநாயகிகள் நடிக்கவுள்ளனராம் *உலகளவில் ‘துரந்தர் 2’ இதுவரை ₹1,475 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது *செல்வராகவன் நடித்துள்ள ‘மனிதன் தெய்வமாகலாம்’ பட டிரெய்லர் வெளியாகியுள்ளது *ஸ்ரீ விஷ்ணுவின் ‘மிருத்யுஞ்சய்’ இன்று முதல் நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.
Similar News
News April 9, 2026
மட்டன் சாப்பிடும்போது மரணம்

மட்டன் சாப்பிட்டும்போது தொண்டையில் சிக்கியதால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானாவை சேர்ந்த பனோத்து பிச்சா(54), டின்னருக்காக ஆசை ஆசையாய் மட்டன் சாப்பிட்டிருக்கிறார். அப்போது ஒரு துண்டு அவரது தொண்டையில் சிக்கி முச்சுத் திணறலை ஏற்படுத்தியுள்ளது. ஹாஸ்பிடலுக்கு செல்வதற்குள் உயிர் பிரிந்துவிட்டது. மனிதர்களுக்கு இறப்பு எப்படியெல்லாம் வருகிறது என பார்த்தீங்களா?
News April 9, 2026
தவெக தொண்டர்கள் பயந்துட்டாங்க: SP வேலுமணி

கரூர் சம்பவத்தால் பயந்து போனதால்தான் தவெக தொண்டர்களே EPS கூட்டத்துக்கு வந்து கொடி காட்டினார்கள் என SP வேலுமணி கூறியுள்ளார். அக்டோபரில் நடந்த EPS கூட்டத்தில் தவெக கொடி காட்டப்பட்டது கூட்டணிக்காக அதிமுக போட்ட ஸ்கெட்ச் என பேசப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்த அவர், தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையே நடக்கவில்லை; அவர்களை சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை எனவும் விளக்கமளித்துள்ளார்.
News April 9, 2026
உதயநிதிக்கு உடல்நலம் பாதிப்பு

கடந்த சில நாள்களாக தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வரும் உதயநிதி ஸ்டாலினுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இன்று காலை மாதவரம் திமுக வேட்பாளர் எஸ்.சுதர்சனத்தை ஆதரித்து உதயநிதி பரப்புரை செய்தார். அப்போது தொண்டை கரகரப்புடன் சிரமப்பட்டு பேசிய அவர், தனக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் உங்களிடம் நிறைய நேரம் பேசமுடியவில்லை எனப் பிரசாரத்தை பாதியில் முடித்துக் கொண்டார்.


