News March 30, 2026

CINEMA 360: துரந்தர் வெற்றி.. ₹500 கோடி கேட்கும் பாக்.,

image

பாகிஸ்தானின் லயாரி பகுதியில் நடக்கும் கதையாக துரந்தர் படம் அமைந்துள்ள நிலையில், தங்களுக்கு ₹500 கோடி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர் *ஜெயிலர், லியோ, விக்ரம் போல லீடர் படமும் மெகா ஹிட்டாகும் என ‘லெஜெண்ட்’ சரவணன் தெரிவித்துள்ளார் *அரசியலை மையமாக கொண்டு உருவாகியுள்ள ‘TN 2026’ படம் வரும் ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகவுள்ளது *மடோன் அஸ்வின் இயக்கும் படத்தில் கார்த்தி நடிக்கவுள்ளாராம்.

Similar News

News April 14, 2026

திமுகவுக்கு ஆதரவாக அரவிந்த் கெஜ்ரிவால் பிரசாரம்

image

தமிழகத்தில் ஸ்டாலின் மற்றும் திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்காக ஏப்.20-ம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் தமிழகம் வருகிறார். சென்னை உள்ளிட்ட இடங்களில் ஏப்.20, 21 ஆகிய தேதிகளில் நடைபெறும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கெஜ்ரிவால் பங்கேற்று உரையாற்றுவார் என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. இண்டியா கூட்டணியில் இருந்து விலகிய AAP, திமுகவுக்கு ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

News April 14, 2026

திமுக வேட்பாளர் வீட்டில் கொள்ளை

image

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் கடற்கரை ராஜ் வீட்டில் துணிகர கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. நேற்று சத்திரப்பட்டியில் அவரை ஆதரித்து CPM மாநிலச் செயலாளர் சண்முகம் பரப்புரை செய்தார். அதில் பங்கேற்பதற்காக கடற்கரை ராஜ் சென்ற நேரத்தில், அவரின் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் 122 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 14, 2026

திமுக குறைவான தொகுதிகளை ஒதுக்கியதால் சோர்வு: CPI

image

திமுக குறைவான தொகுதிகளை ஒதுக்கியிருப்பதால் சோர்வு ஏற்பட்டிருப்பதாக CPI-ன் வீரபாண்டியன் பேசியுள்ளார். ஆனால் சோர்வை கடந்து செல்லும் அரசியல் தங்களிடம் இருப்பதாக கூறிய அவர், உழைக்கும் மக்களின் உரிமைப்போருக்கான அரசியலில் பின்வாங்குவதாக இல்லை என்றார். மேலும், ஒருநாள் இந்த நாடு இடதுபக்கம் திரும்பும் என்றும் அறிவும், நுட்பமான சிந்தனைகளும் வளர வளர மக்கள் பொதுவுடைமையை விரும்புவார்கள் எனவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!