News December 23, 2024
கிறிஸ்துமஸ் சிறப்பு ரயில்: தென் மாவட்ட மக்கள் குஷி

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தாம்பரம் – கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில் விடப்பட்டுள்ளது. இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து டிச.24, 31 ஆகிய தேதிகளில் நள்ளிரவு 00.35-க்கு புறப்பட்டு, அதே நாள் மதியம் 12.15-க்கு கன்னியாகுமரி சென்றடையும். மறுமார்க்கமாக, கன்னியாகுமரியில் இருந்து டிச.25, ஜன.1 ஆகிய தேதிகளில் மாலை 4.30-க்கு புறப்பட்டு, மறுநாள் காலை 4.20-க்கு தாம்பரம் வந்தடையும்.
Similar News
News September 10, 2025
திமுக அரசு ஒரு பித்தலாட்ட அரசு: EPS

திமுக அரசு ஒரு பொய், பித்தலாட்ட அரசு என EPS கடுமையாக விமர்சித்துள்ளார். திமுக ஆட்சியில் துவங்கப்பட்ட தொழில் முதலீடுகள், உருவாக்கப்பட்ட வேலை வாய்ப்புகள், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாரியாக வெள்ளை அறிக்கை வெளியிடாதது ஏன் என அவர் X தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விஷயத்தில் திமுக அரசு பொய்யான புள்ளிவிவரங்களை அள்ளிவிட்டு மக்களை ஏமாற்ற வேண்டாம் எனவும் EPS சாடியுள்ளார்.
News September 10, 2025
துணை ஜனாதிபதிக்கு சம்பளம் கிடையாது!

துணை ஜனாதிபதியாக சிபி ராதாகிருஷ்ணன் தேர்வாகியுள்ளார். நாட்டின் 2-வது உயரிய பதவியான துணை ஜனாதிபதிக்கு சம்பளம் கிடையாது என்பது தெரியுமா? உண்மைதான். அரசியல் சட்ட அந்தஸ்து கொண்ட பதவிகளில், சம்பளம் இல்லாத ஒரே பதவி இது மட்டும் தான். ஆனால், ராஜ்யசபா தலைவராக பணியாற்றுவதற்காக, அவருக்கு மாதம் ₹4 லட்சம் சம்பளம் வழங்கப்படும். இதுபோக இலவச பங்களா, மருத்துவப்படி, விமான பயணம் என பல்வேறு சலுகைகள் வழங்கப்படும்.
News September 10, 2025
வரலாற்று சாதனையை படைப்பாரா அர்ஷ்தீப்?

ஆசிய கோப்பையில் இந்திய அணி நாளை UAE-ஐ எதிர்கொள்கிறது. இதில் அர்ஷ்தீப் சிங் 1 விக்கெட் எடுத்தால், வரலாற்று சாதனையை படைப்பார். சர்வதேச டி20-களில் 100 விக்கெட் வீழ்த்திய முதல் இந்தியர் என்ற சாதனையையும், உலகளவில் விரைவாக 100 சர்வதேச டி20 விக்கெட்களை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையும் செய்ய வாய்ப்புள்ளது. இதுவரை 63 போட்டிகளில் விளையாடியுள்ள அர்ஷ்தீப், 99 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.