News March 30, 2024
அந்த வாய்ப்பை சோப்ராவுக்கு அளித்திருக்க வேண்டும்

ஒலிம்பிக்ஸ் தொடக்க விழாவில் தேசிய கொடியை ஏந்தும் வாய்ப்பை நீரஜ் சோப்ராவுக்கு அளித்திருக்க வேண்டும் என்று இந்திய தடகள சங்கத்தின் துணைத் தலைவர் அஞ்சு ஜார்ஜ் கூறியுள்ளார். டெல்லியில் பேசிய அவர், “டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட தேசிய விளையாட்டு சங்கங்கள் இன்னும் ஒலிம்பிக் போட்டிக்கான தங்கள் அணியையே அறிவிக்கவில்லை. இந்நிலையில், அதற்குள் எப்படி சரத் கமல் தேர்வு செய்யப்பட்டார் என்று தெரியவில்லை” என்றார்.
Similar News
News December 10, 2025
‘மிஸ்டர் இந்தியா’ பட்டம் வென்ற CISF கான்ஸ்டபிள்

ஜெய்ப்பூரில் நடைபெற்ற 6-வது மிஸ்டர் இந்தியா 2025 சாம்பியன்ஷிப் போட்டியில், CISF கான்ஸ்டபிள் ரிஷிபால் சிங் வெற்றி பெற்று அசத்தியுள்ளார். இவர், 50+ வயது மற்றும் 65–70 kg பிரிவுகளில் தங்கப் பதக்கங்களுடன் ‘மிஸ்டர் இந்தியா’ கோப்பையையும் வென்றுள்ளார். இதற்காக CISF, அவரை பாராட்டியுள்ளது. மேலும், இந்த வெற்றி மூலம், ரிஷிபால், CISFக்கு தேசிய அளவில் அதிக மரியாதையை பெற்றுத் தந்துள்ளதாகவும் புகழ்ந்துள்ளது.
News December 10, 2025
திருப்பரங்குன்றம் தர்காவுக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா மற்றும் பெரிய வீதியில் உள்ள பள்ளிவாசலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரம் SC வரை சென்றுள்ள நிலையில், இந்த வெடிகுண்டு மிரட்டல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News December 10, 2025
சுபகாரியங்களுக்கு வாழை மரம் கட்டுவது ஏன்?

சுபகாரியங்கள் நடைபெறும் இடங்களிலும், கல்யாண வீடுகளிலும் முகப்பு பந்தலில் வாழை மரம் கட்டுவது தமிழர்களின் வழக்கம். அதில் வாழைப்பழ குலையும் தொங்கும். இதற்கான காரணம் தெரியுமா? வாழையடி வாழையாக குலம் தழைத்து வாழவேண்டும் என்ற அடிப்படையில் அவ்வாறு செய்யப்படுகிறது. மேலும், வாழையின் இலை, பூ, காய், கனி என எல்லாமும் பயன்படுவது போல, நாமும் பயனுள்ள வாழ்க்கையை வாழ வேண்டும் என்பது அர்த்தமாகும்.


