News March 28, 2024
செவ்வாய் தோஷம் போக்கும் சூட்சுமபுரீஸ்வரர்

செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் திருமணத் தடையை போக்கும் மிக சிறப்பு வாய்ந்த தலமாக திருச்சிறுகுடி சூட்சுமபுரீஸ்வரர் கோயில் போற்றப்படுகிறது. இந்தத் தலத்துக்கு வந்து மங்களத் திருக்குளத்தில் நீராடி, அம்பாள் பூஜித்த சூட்சுமநாதருக்கு சிவப்பு நிற ஆடை அணிவித்து, சிவப்பு மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்து, துவரை சாதம் படைத்து வழிபட்டால் செவ்வாய் தோஷம் நீங்குவதோடு, சிறந்த வாழ்க்கைத்துணை அமையும் என்பது ஐதீகம்.
Similar News
News October 28, 2025
விஜய்யின் அடுத்த கட்ட நகர்வு

கரூர் துயர சம்பவத்துக்கு பிறகு 1 மாதமாக முடங்கிப்போய் இருக்கிறது தவெக. நேற்றுதான் பலியானோர் குடும்பத்தை அழைத்து விஜய் ஆறுதல் சொல்லி, இழப்பீடு வழங்கினார். இந்நிலையில், மீண்டும் புத்துணர்ச்சியோடு தேர்தல் பணிகளை தொடர்வது குறித்து 2-ம் கட்ட நிர்வாகிகளோடு விஜய் ஆலோசனை நடத்தியுள்ளார். இதில், கட்சியின் பொதுக்குழுவை விரைவில் நடத்தவேண்டும் என விஜய் சொன்னதாக கூறப்படுகிறது.
News October 28, 2025
‘மொன்தா’ பெயரின் அர்த்தம் தெரியுமா?

இன்று தமிழகம், ஆந்திராவை அதிர வைத்துள்ள ‘மொன்தா’ புயலின் பெயர் காரணம் தெரியுமா? இப்பெயரை தாய்லாந்து நாடு பரிந்துரைத்துள்ளது. தாய்லாந்து மொழியில் ‘மொன்தா’ என்றால், ‘மணமிக்க மலர்’ அல்லது ‘அழகான பூ’ என பொருள் பெறுகிறது. மேலும், மென்மை, அழகு & இயற்கையின் மணத்தை குறிக்கவும் தாய்லாந்து மொழியில் ‘மொன்தா’ குறிப்பிடப்படுகிறது. எனவே, இயற்கையின் அழகையும், மழையின் நறுமணத்தையும் ‘மொன்தா’ பிரதிபலிக்கிறது.
News October 28, 2025
இந்தியாவின் டாப் 5 பணக்கார கோயில்கள்!

இந்தியாவில் துட்டு கொட்டோ கொட்டு’னு கொட்டும் கோயில் திருப்பதி என அனைவரும் அறிவோம். ஆனால், திருப்பதியை போலவே நாட்டின் பணக்கார கோயில்கள் லிஸ்ட் உங்களுக்கு தெரியுமா? மேலே உள்ள போட்டோவை வலது பக்கமாக Swipe செய்து அந்த லிஸ்ட்டை பார்க்கவும். இவற்றில் எந்தெந்த கோயில்களில் நீங்க தரிசனம் செஞ்சிருக்கீங்க?


