News February 11, 2026
Cholesterol இருக்கா? நகங்களை பார்த்தே தெரிஞ்சிக்கலாம்

கொலஸ்ட்ரால் அதிகரித்தால், நகங்கள் மூலம் அதை தெரிந்துகொள்ளலாம் என டாக்டர்கள் கூறுகின்றனர். ➤பொதுவாக இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் நகங்கள், ரத்த ஓட்டம் சீராக இல்லையெனில் வெளிர்/வெள்ளை நிறமாக மாறும் ➤உடைந்த நகம் மீண்டும் வளர அதிக நேரம் எடுக்கும் ➤சில சமயங்களில் நகம் தடிமனாக வளரலாம் ➤சதைக்கு உள்ளேயே நகம் வளரும் ➤நகங்கள் நீலம்/ஊதா நிறத்தில் மாறினால் டாக்டரை அணுகுங்கள். SHARE.
Similar News
News February 15, 2026
இன்று இரவு இந்த 1 மணி நேரம் தூங்காதீர்கள்

மகா சிவராத்திரியான இன்று இரவு முழுவதும் கண் விழிக்க முடியாதவர்கள், 3-ம் கால பூஜை நேரமான இரவு 11:30 மணி முதல் 1 மணி வரையாவது விழித்திருங்கள். இந்த நேரத்தை லிங்கோத்பவ நேரம் என்பார்கள். சிவன், தன்னை லிங்க வடிவில் வெளிக்காட்டிய நேரம் இதுதான். மேலும், பார்வதி, சிவபெருமானை நோக்கி பூஜித்த நேரமும் இதுதான். இந்த பிரபஞ்சத்தின் மொத்த சக்தி ஆற்றலும் பூமியை நோக்கி வரும் நேரமும் இதுதான் எனவும் நம்பப்படுகிறது.
News February 15, 2026
உரிமைத் தொகை.. புகாருக்கு விளக்கம் அளித்த அரசு

SC, ST நலத்துறை நிதியை பயன்படுத்தியே, மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ₹5,000 டெபாசிட் செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு TN அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. தனி கூடுதல் நிதி ஒதுக்கீட்டின் மூலமே மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், SC, ST நிதியை பாதுகாக்க, அரசு தனிப்பட்ட சட்டத்தை இயற்றியுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 15, 2026
நயினார் மன்னிப்பு கேட்க வேண்டும்: தி.சீனிவாசன்

MGR, ஜெ., படங்களை விஜய் பயன்படுத்தக்கூடாது என்று திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார். தனது சொந்த செல்வாக்கில் விஜய் வெற்றி பெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 30% வாக்கு வங்கி இருப்பதாக விஜய் கூறினாலும், எந்த கட்சிக்கு எவ்வளவு வாக்கு வங்கி உள்ளது என்பதை மக்களே தீர்மானிப்பார்கள் என்றார். மேலும், விஜய் – த்ரிஷா சர்ச்சை பேச்சுக்கு நயினார் மன்னிப்பு கேட்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.


