News October 14, 2025

‘பைசன்’ படத்தில் சியான் விக்ரமின் கனெக்‌ஷன்!

image

‘பைசன்’ திரைப்படத்தை துருவ் விக்ரம் தனது முதல் படமாக குறிப்பிடுவது விமர்சிக்கப்படும் போதிலும், இதில் ஒரு சுவாரசிய தகவல் உள்ளது. ‘சியான்’ விக்ரம் நடிப்பில் வெளிவந்த முதல் தமிழ் படமான ‘என் காதல் கண்மணி’, கடந்த அக்டோபர் 17, 1990 அன்றுதான் வெளிவந்தது. 35 வருடங்கள் கழித்து, அதே தேதியில் தற்போது துருவ் விக்ரம் நடித்துள்ள ‘பைசன்’ படமும் வெளியாகிறது. ‘பைசன்’ பெரிய வெற்றி படமாக அமையுமா?

Similar News

News October 14, 2025

தீபாவளிக்கு 5 நாள்கள் விடுமுறை.. ஏன் தெரியுமா?

image

வடமாநிலங்களில் தீபாவளி பண்டிகை 5 நாள்கள் கோலாகலமாக கொண்டாடப்படுவதால், அங்கு 4-5 நாள்கள் தொடர் விடுமுறை அளிக்கப்படுகிறது. நாம் அதிகபட்சம் 2 நாளில் தீபாவளி கொண்டாட்டத்தை முடித்து விடுகிறோம். ஆனால், வடமாநிலங்களில் அப்படி என்ன வித்தியாசமாக தீபாவளி கொண்டாடுகிறார்கள்? மேலே உள்ள போட்டோக்களை SWIPE செய்து பாருங்க.

News October 14, 2025

மத்திய அரசில் 348 காலியிடங்கள்.. ₹30,000 சம்பளம்!

image

இந்திய அஞ்சல் வங்கியில் (IPPB) காலியாக உள்ள 348 Executive பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தமுள்ள 348 காலியிடங்களில், தமிழ்நாட்டில் மட்டும் 17 காலியிடங்கள் உள்ளன. 20- 35 வயதுக்குட்பட்ட டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. மாதம் ₹30,000 சம்பளம் வழங்கப்படும். வரும் 29-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முழு விவரங்களுக்கு <>இங்கே<<>> கிளிக் செய்யவும்.

News October 14, 2025

மா விவசாயிகளின் நலனுக்காக PM மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

image

மாம்பழ விவசாயிகள் நலனுக்காக PM மோடிக்கு CM ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மாம்பழ ஏற்றுமதி மற்றும் மதிப்புக் கூட்டு பொருள்களின் உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் வலியுறுத்தியுள்ளார். 2025-ல் பதப்படுத்தக் கூடிய மாம்பழ வகைகளை பயிரிட்ட விவசாயிகள், கொள்முதல் விலை வீழ்ச்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!