News August 9, 2024
சின்ன வெங்காயம் ₹10

திருச்சி வெங்காய மண்டியில் சின்ன வெங்காயம் மொத்த விலையில் கிலோ ₹10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகம் முழுவதிலும் இருந்தும் 200 டன், கர்நாடகாவில் இருந்தும் 300 டன் சின்ன வெங்காயம் திருச்சிக்கு வந்துள்ளது. மலைபோல் குவிந்துள்ள சின்ன வெங்காயம் கிலோவுக்கு 10 ரூபாய், பெரிய வெங்காயம் கிலோவுக்கு 25 ரூபாய்-க்கும் விற்பனையாகிறது. இதனால், தமிழ்நாடு முழுவதும் வெங்காயம் விலை குறைய வாய்ப்புள்ளது.
Similar News
News November 9, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துவினையாடல்
▶குறள் எண்: 514
▶குறள்: எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான் வேறாகும் மாந்தர் பலர்.
▶பொருள்: எல்லா வகையிலும் ஆராய்ந்து உரிய பதவி வழங்கிய பின்னும், செயல் திறத்தால், எதிர்பார்த்த அளவு இல்லாத மாந்தர் பலராவர்.
News November 9, 2025
‘ரஜினி, கமலுக்காக 3 நாள்களில் ரெடியான கதை’

ரஜினி, கமல் இணைந்து நடிக்கும் வகையில் மூன்றே நாள்களில் கதை ஒன்றை எழுதியதாக மிஷ்கின் தெரிவித்துள்ளார். அது ஒரு வரலாற்று கதை என்றும், இது குறித்து தயாரிப்பாளர் தாணுவிடம் கூறி ஓகே வாங்கியதாகவும் மிஷ்கின் பேசியுள்ளார். ஆனால், ஏனோ அக்கதையை ரஜினி, கமலிடம் சொல்லாமல் டிராப் செய்ததாக அவர் கூறியுள்ளார். அந்த கதையில் விஜய் சேதுபதிக்கு முக்கிய கதாபாத்திரம் இருந்ததாகவும், மிஷ்கின் குறிப்பிட்டுள்ளார்.
News November 9, 2025
ஐபிஎல் 2026: வீரர்களை தக்கவைக்க கெடுவிதிப்பு

ஐபிஎல் 2026 சீசனுக்காக தக்கவைத்த வீரர்களின் விவரத்தை வரும் 15-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க அணி நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அன்றைய நாளிலேயே டிரேடிங் செய்யப்பட்ட வீரர்களின் விவரமும் வெளியாகவுள்ளது. விடுவிக்கப்படும் வீரர்களின் தொகை, அணிகளின் ஏலத் தொகையுடன் சேர்க்கப்படும். அதை தொடர்ந்து டிசம்பரில் வீரர்கள் ஏலம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. CSK யாரை தக்கவைக்கனும்னு நீங்க நினைக்கிறீங்க?


