News August 8, 2024

இலங்கை தமிழர் பகுதிகளில் குவிக்கப்படும் சீன ராணுவம்?

image

இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் எம்.பி. செல்வம் அடைக்கலநாதன் நேற்று பேசினார். அவர் பேசிய போது, “சீன ராணுவத்தை தமிழர் பகுதிகளில் குவிக்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வருகிறது. இது உண்மை தானா? ஏற்கனவே இலங்கை ராணுவத்தால் நாங்கள் அனுபவிக்கும் துயரம் போதாதா? தமிழர் வரலாற்றை சிதைக்கவே சீன ராணுவம் குவிக்கப்படுகிறது” என அவர் கண்டனம் தெரிவித்தார்.

Similar News

News October 15, 2025

எடப்பாடி அல்ல ‘பொய்’பாடி பழனிசாமி: அமைச்சர் ரகுபதி

image

சட்டசபையில் EPS முழுக்க பொய்யை மட்டுமே பேசியதாக அமைச்சர் ரகுபதி குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் பேட்டியளித்த அவர், கரூர் சம்பவத்தை வைத்து அரசியல் செய்யலாம், கூட்டணி சேர்க்கலாம் என EPS கனவு காண்பதாக விமர்சித்துள்ளார். விஜய்யின் எல்லா கூட்டங்களிலும் மக்கள் பாதிக்கப்பட்டதற்கு ஆதாரம் இருப்பதாக கூறிய ரகுபதி, எத்தனை கூட்டணி அமைந்தாலும் திராவிட மாடல் ஆட்சியே மீண்டும் அமையும் என்று குறிப்பிட்டுள்ளார்.

News October 15, 2025

BREAKING: TVK மாவட்ட செயலாளர் ஜாமின் தள்ளுபடி

image

கரூரில் விஜய் பிரசாரம் நடைபெற்றபோது ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு இடையூறு செய்ததாக. தவெக சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து ஜாமின் கேட்டு அவர் கரூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அவரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். ஏற்கெனவே கரூர் மாவட்ட செயலாளர் மதியழகனின் ஜாமின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

News October 15, 2025

தண்ணீர் குடிக்காவிட்டால் தலைவலி ஏற்படுமா?

image

அன்றாடம் போதுமான அளவு தண்ணீர் குடிக்க தவறினால் நமக்கு தலைவலி ஏற்படும் என்பது உண்மையா? ஆம். நம் உடலில் நீரிழப்பு ஏற்பட்டால் தலைவலி ஏற்படும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இதனால் மூளை சுருங்குவதோடு, நரம்புகளில் அழுத்தம் உண்டாகி சோர்வு, தலைச்சுற்றல் மற்றும் குமட்டல் ஏற்படும். எனவே, அன்றாடம் சராசரியாக 3 லிட்டர் தண்ணீர் மற்றும் ஜூஸ் உள்ளிட்ட நீர்ச்சத்து நிறைந்த பானங்களை அருந்தலாம்.

error: Content is protected !!