News September 3, 2025
அணுகுண்டை விட 200 மடங்கு powerful.. சீனாவின் ஏவுகணை

சீனாவின் <<17598250>>Victory Parade-ல்<<>> நேற்று இடம்பெற்ற, அதன் அணு ஆயுத ஏவுகணை அதிக கவனம் ஈர்த்துள்ளது. DF-5C என்று பெயரிடப்பட்ட இந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையின் தாக்குதல் தொலைவு 20,000 கிமீ என்பதால், உலகின் எந்த மூலையிலும் தாக்குதல் நடத்த முடியுமாம். இது ஹிரோஷிமாவில் அமெரிக்கா வீசிய அணுகுண்டை விட 200 மடங்கு சக்திவாய்ந்ததாம். இந்த ஆயுத அணிவகுப்பே, ‘கிட்ட வராதே’ என்று அமெரிக்காவை எச்சரிக்க தானாம்.
Similar News
News September 4, 2025
BREAKING: சோப்பு, டூத் பேஸ்ட் விலை குறைகிறது

அன்றாடம் பயன்படுத்தும் பல பொருள்களின் மீதான ஜிஎஸ்டி வரி 18% இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி தலைக்கு தேய்க்கும் எண்ணெய், ஷாம்பு, டூத் பேஸ்ட், சோப், ஷேவிங் கிரீம் விலை குறையும். சமையல் பாத்திரங்கள் மற்றும் பிறந்த குழந்தைக்கு பயன்படும் பொருள்களின் மீதான வரியும் 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் தையல் இயந்திரம் மற்றும் அதன் பாகங்கள் மீதான வரியும் 12% இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
News September 4, 2025
சற்றுமுன்: TV, பைக், ஏசி விலை குறைகிறது

28% ஜிஎஸ்டி வரம்பு நீக்கப்பட்டதால், அந்த பட்டியலில் இருந்த பெரும்பாலான பொருள்கள் 18% வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி, ஏசி, டிவி (32 inch மேல்), கம்யூட்டர் மானிட்டர், புரொஜெக்டர், டிஷ் வாஷிங் மெஷின் உள்ளிட்டவை 18% வரம்பிற்கு மாற்றப்பட்டுள்ளன. மேலும், கார்கள், 3 சக்கர வாகனங்கள், பைக்குகள்(350cc-க்கு கீழ்) உள்ளிட்டவற்றின் ஜிஎஸ்டி 28%-ல் இருந்து 18% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
News September 4, 2025
கூல்டிரிங்ஸ், புகையிலை பொருள்களுக்கு 40% வரி

சொகுசு கார்கள், கூல்டிரிங்ஸ், பான்மசாலா, புகையிலை பொருள்களுக்கு 40% வரிவிதிக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்த புதிய வரிவிதிப்பிற்கு இன்றைய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும், இந்த மாற்றங்கள் வரும் 22-ம் தேதி அமலாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.