News March 27, 2025
சீனாவின் ராஜதந்திரம்.. டிரம்பால் வந்த வினை

டிரம்ப் நிர்வாகத்தால் சமீபத்தில் வேலைநீக்கம் செய்யப்பட்ட அரசு ஊழியர்களை சீன உளவு அமைப்புகள் டார்கெட் செய்வது தெரிய வந்துள்ளது. நிதி நெருக்கடியில் இருக்கும் அவர்களை போலியான நிறுவனங்கள் மூலம் பணியில் அமர்த்தி, அமெரிக்க அரசின் ரகசிய தகவல்களை பெற முயற்சிப்பதாக USA புலனாய்வு அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. ஆனால் இந்த நிறுவனங்கள் குறித்து தங்களுக்கு தெரியாது என சீனா மறுப்பு தெரிவித்துள்ளது.
Similar News
News November 23, 2025
விஜய்க்கு அண்ணாவை பற்றி என்ன தெரியும்? TKS

அண்ணாவின் கொள்கைகளை திமுக மறந்துவிட்டதாக விஜய் விமர்சித்திருந்த நிலையில், விஜய்க்கு அண்ணாவை பற்றி ஒன்றும் தெரியாது என TKS இளங்கோவன் பதிலளித்துள்ளார். அண்ணா CM ஆக வேண்டும் என கட்சி ஆரம்பிக்கவில்லை, ஆனால் முதல் தேர்தலிலேயே CM ஆக வேண்டும் என கட்சி ஆரம்பித்தவர் விஜய் என்று விமர்சித்துள்ளார். அண்ணாவின் கொள்கைகளை இப்போது வரை திமுக நிறைவேற்றி வருவதாகவும் TKS குறிப்பிட்டார்.
News November 23, 2025
₹105 கோடி.. தமிழ் சினிமாவில் வரலாறு படைத்த ‘ஜனநாயகன்’

‘ஜனநாயகன்’ படத்தின் தியேட்டர் உரிமம், 5 விநியோகஸ்தர்களுக்கு பிரித்து விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மொத்தம் ₹105 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாகவும், தமிழ் சினிமா வரலாற்றில், ஒரு படத்தின் தியேட்டர் உரிமம் இவ்வளவு பெரிய தொகைக்கு விற்கப்படுவது இதுவே முதல்முறை என்றும் சினிமா வட்டாரங்கள் ஆச்சரியத்துடன் தெரிவிக்கின்றன. இது விஜய்யின் கடைசி படம் என்பதால், பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
News November 23, 2025
பிங்க் டால்பின் பற்றி தெரியுமா?

அமேசான் நதியின் ஆழத்தில் நீந்தி திரியும் ஒரு அதிசயம் தான் பிங்க் டால்பின். இது ‘போட்டோ’ என்றும் அழைக்கப்படுகிறது. பிறக்கும்போது சாம்பல் நிறத்தில் உள்ள இவை, வளர வளர பிங்க் நிறமாக மாறுகின்றன. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், உற்சாகமடையும் போது இவை மேலும் பிரகாசமான பிங்க் நிறமாக மாறுமாம். மற்ற டால்பின்களை விட புத்தியசாலியானது என கூறும் நிபுணர்கள், இவை அழியும் நிலையில் உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.


