News April 28, 2025
சைலண்டாக உருவாகும் சீனாவின் கிரிக்கெட் அணி!

2028 ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்காக சீனா தனது கிரிக்கெட் அணியை உருவாக்கி வருவதாக AUS முன்னாள் வீரர் ஸ்டீவ் வாக் தெரிவித்துள்ளார். ஒலிம்பிக்ஸில் தங்கப் பதக்கம் வெல்வதையே லட்சியமாகக் கொண்டு அந்த அணி தயாராகி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், T10-ஐயும் சேர்த்து இனி கிரிக்கெட்டில் 4 ஃபார்மெட்கள் இருக்கும் எனவும் கணித்துள்ளார். கடந்த 2023 ஜூலையில் சீனா முதல்முதலாக டி20-யில் மலேசியாவுடன் விளையாடியது.
Similar News
News August 24, 2025
குரூப்-2 தேர்வுக்கு கட்டணமில்லா இலவச வகுப்பு

செப்.,28ம் தேதி நடக்கவிருக்கும் குரூப் 2 போட்டித் தேர்வை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கட்டணமில்லா இலவச வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த வாரம், திங்கள்–பொருளியல், செவ்வாய்–கணக்கு, புதன்–விடுமுறை, வியாழன்–unit 6, வெள்ளி–வரலாறு ஆகிய வகுப்புகள் நடைபெறவுள்ளது. போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இந்த வகுப்புகளை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News August 24, 2025
‘அம்மா நான் சாகப்போறேன்.. என் சாவுக்கு 3 பேர் காரணம்’

தெலங்கானாவில் உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இளைஞர் கொடிரெக்கலா சுதீர்(24) தனது கடிதத்தில், ‘நான் சாகப்போகிறேன். எனது சாவுக்கு 3 பேர் காரணம்’ எனக் குறிப்பிட்டுள்ளார். அதே பகுதியை சேர்ந்த பெண்ணுடன் சுதீர் தவறான உறவில் இருந்ததாக அவரது கிராமத்தைச் சேர்ந்த 3 பேர் வதந்தி பரப்பியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீஸ் விசாரித்து வருகிறது. சோகம்
News August 24, 2025
‘எஞ்சாமி தந்தானே’… ‘இட்லி கடை’ 2-வது பாடல்

தனுஷ் இயக்கி நடிக்கும் ‘இட்லி கடை’ படத்தின் 2-வது பாடல் ‘எஞ்சாமி தந்தானே’ விநாயகர் சதுர்த்திக்கு வெளியாகிறது. இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கிராமிய குத்து பாடலாக எஞ்சாமி தந்தானேவை உருவாக்கியுள்ளார். சிறுவர்களுடன் தனுஷ் குத்தாட்டம் போடும் போஸ்டரை படக்குழு பகிர்ந்துள்ளது. அக்டோபர் 1-ம் தேதி ரிலீஸிற்கு ‘இட்லி கடை’ திட்டமிடப்பட்டுள்ளது.