News April 21, 2025

10ஜிக்கு மாறியது சீனா: INTERNET-ல் அசுர வளர்ச்சி

image

இந்தியாவில் 5ஜி வேகத்தில் இணையதள நெட்வொர்க் வழங்கும் பணிகள் இன்று வரை முழுமையாக முடியவில்லை. ஆனால், அண்டை நாடான சீனா அசுர வேகத்தில் முன்னேறி வருகிறது. சீனாவின் யூனிகாம் நிறுவனத்துடன் கைகோர்த்து, ஹுவாய் நிறுவனம் முதல் முறையாக 10ஜி நெட்வொர்க் வசதியை அறிமுகம் செய்துள்ளது. டெக்னாலஜி மையமாக திகழும் ஹெபெய் மாகாணத்தில் இந்த வசதி அமலாகியுள்ளது. 9834 Mbps வேகத்தில் நெட்வொர்க் இருக்குமாம்.

Similar News

News April 21, 2025

வரிகளை குறைப்பாரா ஜே.டி.வான்ஸ்?

image

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸின் இந்திய வருகை இரு தரப்பு வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கலை தீர்க்குமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய பொருட்கள் மீதான வரிகளை குறைப்பது குறித்து ஜே.டி.வான்ஸிடம் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது. இருதரப்பு வர்த்தக உறவை வலுப்படுத்தும் வகையில் இந்த பேச்சுவார்த்தை அமையும் என வெளியுறவு செய்திதொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

News April 21, 2025

தொடங்கிய டிக்கெட் விற்பனை… CSK ரசிகர்கள் ஆர்வம்

image

சென்னை – ஹைதராபாத் அணிகள் மோதும் ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது. சென்னை அணி ப்ளேஆஃப் சுற்றுக்கு முன்னேற அடுத்து நடக்க உள்ள 6 போட்டிகளிலும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதனிடையே வரும் 25-ம் தேதி சேப்பாக்கத்தில் சென்னை அணி, ஹைதராபாத்தை எதிர்கொள்கிறது. இரு அணிகளும் புள்ளிப்பட்டியலில் கடைசி இடங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

News April 21, 2025

பெண்கள் முன்பு நிர்வாணம்: இளைஞர் அதிரடி கைது!

image

சென்னை வியாசர்பாடி ரயில்வே ஸ்டேஷனில் பெண்கள் பயணம் செய்யும் பெட்டியின் முன்பு நிர்வாணமாக நின்று கொண்டு ஆபாச சைகையில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 10-ம் தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பாக பெண்கள் பலர் ரயில்வே போலீசில் புகார் அளித்தனர். பின்னர், அவரை பிடிக்க பரிசுத் தொகை அறிவித்து தேடி வந்த நிலையில், முனுசாமி என்பவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!