News March 4, 2025

அமெரிக்க பொருட்களுக்கு வரியை உயர்த்திய சீனா

image

அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் விவசாயம், உணவுப் பொருட்களுக்கு, சீனா புதிதாக 10% – 15% வரை வரி விதித்துள்ளது. முன்னதாக சீன பொருட்களுக்கான வரியை 10%இல் இருந்து 20% ஆக USA உயர்த்தியதால் இந்த பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. USA அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து பல்வேறு தடாலடியான முடிவுகளை எடுத்து வருகிறார். இதனால் வர்த்தகப் போர் மூளும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Similar News

News March 4, 2025

நடிகையுடன் கலக்கும் குட்டி டிராகன்

image

VJ Siddhu Vlogs மூலம் சமூக வலைதளங்களில் பிரபலமான ஹர்ஷத் கான், டிராகன் படம் மூலம் திரைத்துறையில் அடியெடுத்து வைத்தார்.
டிராகன் படத்தில் குட்டி டிராகன் கதாபாத்திரத்தில் வந்த ஹர்ஷத் கான் பலரின் கவனத்தை ஈர்த்தார். தற்போது டிராகன் பட நடிகர் கயாடு லோஹருடன் அவர் இருக்கு ஸ்டைலிஷான புகைப்படங்களை இன்ஸ்டாவில் அவர் பகிர்ந்துள்ளார்.

News March 4, 2025

எனக்கு எண்டே கிடையாது.. சாதனை படைத்த கோலி

image

இளைஞர்களின் கனவு நாயகனாக வளம் வரும் கோலி இன்று புதிய சாதனையை படைத்துள்ளார். 1st Semi-Final-லில் ஆஸி.,வுக்கு எதிரான போட்டியில் 50* ரன்கள் விளாசியதன் மூலம், சாம்பியன்ஸ் டிராபியில் அதிக ரன் குவித்த இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார். 10 போட்டிகளில் 701 ரன்கள் குவித்து தவான் முதலிடத்தில் இருந்த நிலையில், அவரின் சாதனையை கோலி முறியடித்து, நான் தான் எப்போதும் நம்பர் 1 என்று நிரூபித்துள்ளார்.

News March 4, 2025

பெண்களே.. எங்கே டூர் கூட்டிட்டு போறாங்கனு தெரியுமா?

image

சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8ஆம் தேதி பெண்களுக்கான <<15651976>>ஸ்பெஷல் சுற்றுலாவை<<>> தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க மாமல்லபுரத்துக்கும், அதன் அருகே உள்ள சுற்றுலா தலமான முதலியார்குப்பத்துக்கும் பெண்கள் அழைத்து செல்லப்படவுள்ளனர். எழில்கொஞ்சும் அழகிய தீவான முதலியார்குப்பம், வெளிநாட்டு பறவைகளின் சரணாலயமாகவும் விளங்குகிறது. அதுதவிர, படகு சவாரியும், நீர் விளையாட்டுகளும் ரொம்ப ஃபேமஸ்.

error: Content is protected !!