News September 18, 2025
சீன மாஸ்டர்ஸ்: காலிறுதியில் பி.வி.சிந்து

சீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியின் காலிறுதிக்கு இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தகுதி பெற்றார். 6-ம் நிலையில் உள்ள தாய்லாந்தின் போர்ன்பாவி சோச்சுவாங்கை எதிர்கொண்ட அவர், 21 – 15, 21 -15 என்ற கணக்கில் வெற்றியடைந்தார். சமீபகாலமாக பெரிய வெற்றியை பெறாமல் உள்ள சிந்து, இந்த தொடரில் தடம் பதிக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் போராடி வருகிறார்.
Similar News
News September 18, 2025
₹12 ஆயிரம் போட்டால் ₹40 லட்சம் கிடைக்கும் மாஸ் திட்டம்!

போஸ்ட் ஆபீஸின் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் (PPF) மூலம் மாதம் ₹12,500 முதலீடு செய்தால் 15 ஆண்டுகள் கழித்து ₹40.68 லட்சம் உங்களுக்கு கிடைக்கும். அதாவது, ஒவ்வொரு மாதமும் ₹12,500 முதலீடு செய்தால், 15 ஆண்டுகளில் மொத்தம் ₹22.5 லட்சம் இருக்கும். அத்துடன், அரசின் 7.1% வட்டி விகிதத்தை சேர்த்தால் ₹40.68 லட்சம் கிடைக்கும். இந்த திட்டத்தில் இணைய போஸ்ட் ஆபீஸுக்கு செல்லுங்கள். SHARE.
News September 18, 2025
256 திட்டங்களை கைவிட தமிழக அரசு முடிவு: அண்ணாமலை

திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் 10% கூட முழுமையாக நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றியுள்ளதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். சட்டசபையில் வெளியிட்ட 256 திட்டங்களை, நிறைவேற்ற சாத்தியமில்லை என்பதால் அவற்றை கைவிட அரசு முடிவெடுத்துள்ளதாக செய்தி வெளியாகிருப்பதாக தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில், சொல்லாமல் செய்தது, ஊர் ஊராக கருணாநிதியின் சிலை வைத்தது மட்டும்தான் எனவும் விமர்சித்துள்ளார்.
News September 18, 2025
BREAKING: கனமழை வெளுத்து வாங்கும்

தமிழ்நாட்டில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என IMD மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், தி.மலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், சென்னையில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.