News April 27, 2025
சீனாவே காரணம்.. மதுரை ஆதீனம்

பஹல்காம் தாக்குதல் விவகாரத்தால் பாக்.-க்கு சிந்து நதி நீரை தரக்கூடாது எனக் கூறிய மதுரை ஆதீனம், பாக்.-ஐ தனிமைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு சீனா தான் காரணம் என குற்றஞ்சாட்டிய அவர், வக்ஃபுக்காக போராடுபவர்கள் ஏன் இந்த விவகாரம் குறித்து பேசுவதில்லை என கேள்வி எழுப்பினார். பாகிஸ்தான் ஒரு மதக்கலவர பூமி என குறிப்பிட்ட ஆதீனம், சீனாவை உலக நாடுகள் ஒதுக்க வேண்டும் என்றார்.
Similar News
News January 11, 2026
வெனிசுலா எண்ணெய் இனி இந்தியாவுக்குமா?

வெனிசுலாவின் கச்சா எண்ணெய்யை இந்தியாவிற்கு விற்பனை செய்ய டிரம்ப் நிர்வாகம் பச்சைக்கொடி காட்டியுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தையில் ரிலையன்ஸ் நிறுவனம் ஏற்கனவே ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ரஷ்ய எண்ணெயை சார்ந்து இந்தியா இருப்பதை USA விரும்பவில்லை என்பதால், இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம், <<18786451>>டிரம்ப்<<>> அறிவித்ததுபோல, இந்த வர்த்தகம் மூலம் கிடைக்கும் பணமும் USA-யிடமே இருக்கும்.
News January 11, 2026
மாதவிடாய் பிரச்னையா? இதோ சிம்பிள் தீர்வு!

மாதவிடாய் பிரச்னை பெரும்பாலான பெண்களுக்கு உள்ளது. இதில் முக்கியமான பிரச்னை மாதவிடாயின் போது அதிக ரத்தப்போக்கு ஏற்படுவதுதான். இதற்கு எளிய மருத்துவம் உள்ளது. 2 ஸ்பூன் கறிவேப்பிலை சாறு, அருகம்புல் சாறு தினமும் 3 வேளை சாப்பிட வேண்டும். 30 நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டுவர அதிக ரத்தப்போக்கு பிரச்னை சரியாகும் என சித்தா டாக்டர்கள் கூறுகின்றனர். நீங்கள் அக்கறை கொண்டுள்ள பெண்களுக்கு SHARE பண்ணுங்க.
News January 11, 2026
பாஜக முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல: நிதின் கட்கரி

சாதி, மத வேறுபாடின்றி அனைவருக்காகவும் பணியாற்றுவதே பாஜகவின் கொள்கை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். நாக்பூரில் பேசிய அவர், பாஜக முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல என்றும், பயங்கரவாதமும், பாகிஸ்தானும் தான் தங்கள் எதிரி எனவும் தெரிவித்தார். பாஜக அரசியலமைப்பை மாற்றப்போவதாக கூறுவது பொய் என கூறிய அவர், மதங்கள் வேறாக இருந்தாலும் இந்தியர்களின் ரத்தம் ஒன்றுதான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


