News April 5, 2025
சீனா பீதியடைந்துவிட்டது: டிரம்ப்

USA-வில் சீன இறக்குமதி பொருள்களுக்கு டிரம்ப் 34% வரி விதித்த நிலையில், சீனாவும் USA இறக்குமதிகளுக்கு அதே 34% கூடுதல் வரியை விதித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டிரம்ப், சீனா தவறாக நடந்து கொண்டுவிட்டதாகவும், அவர்கள் பீதியில் இருப்பது வெளியில் தெரிவதாகவும் தெரிவித்துள்ளார். உலகின் பெரிய பொருளாதார வல்லரசு நாடுகளுக்கு இடையே வர்த்தக போர் தொடங்கியுள்ளது.
Similar News
News November 24, 2025
கடைசி நேரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

கனமழை எதிரொலியால் 17 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. விடுமுறை அளிக்காத மாவட்டங்களில் மாணவர்கள் பள்ளிக்கு கிளம்ப தொடங்கிவிட்டனர். இந்நிலையில், கடைசி நேரத்தில் 18-வது மாவட்டமாக சேலத்தில் உள்ள பெத்தநாயக்கன் பாளையம், ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி ஆகிய தாலுகாக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
News November 24, 2025
ரயில்வே வேலை, டிகிரி போதும், 8,858 பணியிடங்கள்

இந்திய ரயில்வேயில் காலியாகவுள்ள ஸ்டேஷன் மாஸ்டர், எழுத்தர் உள்ளிட்ட 8,858 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி, தட்டச்சு (சில பதவிகளுக்கு மட்டும்). வயது வரம்பு: 18 – 33. சம்பளம்: ₹19,900 முதல் ₹35,400 வரை பணிக்கு ஏற்ப வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.27. விண்ணப்பிக்க இங்கே <
News November 24, 2025
BREAKING: 22 மாவட்டங்களுக்கு வந்தது அலர்ட்

அடுத்த 2 மணி நேரத்திற்கு ( 10 மணி வரை) 22 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD அலர்ட் கொடுத்துள்ளது. அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், நெல்லையில் கனமழையும், கோவை, கள்ளக்குறிச்சி, குமரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, திருச்சி, திருப்பூர், விழுப்புரம், விருதுநகரில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.


