News January 4, 2025
அன்று அருணாச்சல், இன்று லடாக் என வம்பிழுக்கும் சீனா

எல்லையில் சீனா, தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறது. 2023இல் அருணாச்சல் எல்லைக் கோட்டில் 11 இடங்களுக்குப் பெயர் சூட்டியதோடு, புதிய மேப்பை வெளியிட்டு நம்மைச் சீண்டியது. இந்தச் சூழலில் தான், 1947 முதலே லடாக்கின் வடமேற்கில் உள்ள அக்சாய் சின் நிலப்பகுதி யாருக்கு சொந்தம் என சர்ச்சை நீடித்து வரும் நிலையில், சீனா புதிதாக 2 மாவட்டங்களை உருவாக்கியுள்ளது. இதற்கு, இந்தியா கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
Similar News
News September 15, 2025
ஹோட்டல் ரூமில் ரகசிய கேமரா இருக்கான்னு தெரியணுமா?

வெளியூர்களுக்கு செல்லும் போது ஹோட்டல்களில் தங்க வேண்டிய கட்டாயம் உருவாகிறது. அப்படி தங்கியிருக்கும் அறையில் ஏதாவது கேமராக்கள் மறைத்து வைக்கப்பட்டு இருக்குமா என்ற ஒருவித பயத்துடனே தங்க வேண்டியுள்ளது. எனவே அடுத்த முறை ஹோட்டல் அறையில் தங்க நேரும் போது அந்த அறை பாதுகாப்பானதா என்பதை சில டிரிக்குகள் மூலம் அறிந்துகொள்ளலாம். டிரிக்குகளை தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் மேலே Swipe செய்து பாருங்கள்.
News September 15, 2025
விஜய்யின் வருகை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: வைகோ

விஜய்யின் அரசியல் பிரவேசம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். திரையில் முன்னணி நட்சத்திரமாக இருப்பதாக, அவரை காண மக்கள் கூடுவதாகவும், ஆனால் தேர்தல் களத்தில் அது எடுபடாது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், தங்களது மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றியை தடுக்கும் சக்தியை விஜய்யால் ஏற்படுத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
News September 15, 2025
ITR தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பு? IT விளக்கம்

ITR தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களை வருமான வரித்துறை மறுத்துள்ளது. இது முற்றிலும் வதந்தி எனவும், ITR தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்பதையும் வருமான வரித்துறை உறுதி செய்துள்ளது. முன்னதாக, வரும் 30-ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்படுவதாக தகவல் வெளியானது. நாடு முழுவதும் இதுவரை 6 கோடிக்கும் அதிகமானோர் ITR தாக்கல் செய்துள்ளனர்.